குழந்தைகள் நல்லவவர்கள்தான்

muslim_children_reading_quranjpg

முரண்பாடுகளை இன்னொரு முரண்பாட்டினாலேயே களைய முற்படுவது எவ்வளவு அபத்தமானது. குழந்தைகள், குழந்தை வளர்ப்பு என வித விதமாகப் பேசப்படும் இன்றைய சூழல்களில் எத்தனை எத்தனை தாய்மார்கள், தந்தைமார்கள் தம் குழந்தைகள் முரண்படும் புள்ளிகளில்; முரண்டுபிடிக்கும் புள்ளிகளில் தம் முரண்பாட்டையும் கொண்டுபோய் இணைத்துவைக்கின்றனர்.
உண்மையில் குழந்தைகள் நல்லவர்கள். அவர்களது போன்ற ரம்மியமான உலகத்தை, அற்புதமான ரசனையை எங்கும் கண்டுகொள்ள முடியாது. இதனால்தானோ நபிகளும் பதின் வயது தாண்டாத குழந்தையர் மீது வற்புறுத்தல் என்பதை வணக்கத்தில்கூடத் தடுத்திருக்கிறார்கள்.

தொடக்கத்தில் கூறியவாறே குழந்தைள் தொடர்பில் ஆய்வுகள், நூல்கள், அவர்கள் தொடர்பிலான கவனமெடுப்புக்கள் அதிகரித்திருப்பதாய் நாம் கண்டுகொண்ட போதிலும் அவை கூறுவனவற்றிற்கு நேர்மாறானவற்றையே எமது வெளிகளில் அதிகமாகவே காணவேண்டியிருக்கிறது. விதிவிலக்கென இருக்கவேண்டியவைகள் விதிகளாகி அவையே சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் கறைகளாக மாறியுள்ளன.
குழந்தைகள் நல்லவர்கள்தான். அதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. ஆனால் நம்மில் பலரும் குழந்தைகளை நோக்கி ‘அவன் ஆக மோசம்’ என்று விரல் நீட்டுவதைத்தான் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. இந்நிலை பெற்றோர்களைத் தாண்டி அவர்களது அடுத்த ஸ்தானத்தில் வைத்து நோக்கப்படும் ஆசான்களில்கூட இது வழக்கமாகிப்போனதொன்றாகவே ஆகியுள்ளது. ஜோர்ஜ் பேர்னார்ட் ஷா கூறிய புகழ்பெற்ற வாசகத்தை போல் ‘மனிதகுலம் உயர்வதற்கான ஒரே நம்பிக்கை என்னைப் பொறுத்தவரையில் ஆசிரியர் பணியில்தான் அடங்கியிருக்கிறது’ என்ற கூற்று மெய்ப்பட செயல்படவேண்டியவர்களாக ஆசான்கள் இருக்கவேண்டிய நிலையில் ஆங்காங்கே அரிதாகத்தான் ஆசான்களின் பின்புலத்தோடு அரியணையேறுகின்ற பிள்ளைகளைக் கண்டுகொள்ள முடிகிறது. அதிலும் முரணிலையாக இன்றைய எமது நளேடுகள் நமக்குத் தரும் செய்திகளில் நம் காலத்தைய ஆசான்களின் நடத்தைப் பிறழ்வுகள் நம்மைத் தலைகுனிய வைக்கின்றன.

இவை பற்றியெல்லாம் பேச நிறைய சமாச்சாரங்கள் இருக்கின்றன. ஆனால் மீண்டும் சொல்வேன். குழந்தைகள் நல்லவர்கள். அவ்வாறாயின் ஏன் இளம் குற்றவாளிகள் சமூகத்தில் உருவாக வேண்டும்? இது பற்றி நிறையவே ஆய்வுகள் பேசியிருக்கின்றன. National Longitudinal Survey of Children and Youth (NLSCY) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின் படி, பெற்றோர் மிகக் கண்டிப்பான குழந்தை வளர்ப்பு முறையினைக் கொண்டவர்களாக இருப்பதால், குழந்தைகள் அதிகளவு வன்முறைத் தன்மைகள், பொதுநலநோக்கற்ற, அன்பற்ற, சமூக அக்கறை இல்லாதவர்களாக வளர்கின்றனர் என்ற முடிவை எடுக்க முடிகிறது.

எதைத்தான் பேசினாலும் எம் சூழல்கள் இன்னும் நிறைய மாறவேண்டியிருக்கிறது. நம் பெற்றோர்கள் குழந்தைகளை நோக்கி வீணே விரல்நீட்டாத காலம் விரைவே வரவேண்டும். ஏனெனில் நம் குழந்தைகள்தான் நமது எதிர்காலங்கள். இல்லை நமது சமூகத்தின் எதிர்காலங்கள். எனவே அவர்களது ஒவ்வொரு அசைவிலும் பொசிடிவ்வான தாக்கங்களை ஏற்படுத்துவது நம் ஒவ்வொருவரினதும் அமானிதம் சார்ந்த விடயமேயாகும். குறிப்பாகப் பெற்றோரும் அதற்கடுத்து ஆசான்களும் பாரிய பொறுப்புகளை சுமந்தவர்கள். னம்மனைவருக்கும் ஏகவல்லவன் அருள்கிட்டவேண்டும். இன்னொரு பேனா முனையில் மீண்டும் சந்திப்போம் அவன் நாட்டத்தால்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s