பென்சிலும் அழிறப்பரும்…

eraser-pencil-19998866

பாடசாலை உபகரணப் பெட்டியினுள் சிறியதொரு அழிறப்பரும் அழகிய பென்சிலொன்றும் இருந்தன.

ஒருநாள் பென்சிலைப் பார்த்து அழிறப்பர், “எப்படி இருக்கிறாய்?” எனக்கேட்டது.

அதற்கு அழிறப்பரோ “நான் உனது நண்பனல்ல..!” என கோபத்துடன் கூறியது.

உடன் திடுக்கிட்ட அழிறப்பர் “ஏன்?” எனக் கேட்டுவிட்டது.

“ஏனெனில் நான் உன்னை வெறுக்கிறேன்…” பென்சில் பதிலளித்தது.

“ஏன் என்னை நீ வெறுக்கிறாய்?” இது அழிறப்பரின் கேள்வி.

“ஏனெனில் நீ நான் எழுதுபவற்றை அழித்துவிடுகிறாயே…” எனச் சொன்னது பென்சில்.

அதற்கு அழிறப்பர் “நான் தவறுகளைத் தவிர எதனையும் அழிப்பதில்லையே…” என உடனே பதிலளித்தது.

குழம்பிப்போன அழிறப்பர் “நீ என்ன சொல்கிறாய்?” எனக்கேட்க,

“நான் அழிறப்பர்… அது தான் என் தொழில்” எனக் கனிவுடன் பதிலளித்தது.

“அது என்ன? அதுவொரு தொழிலா???” எனக் கேட்டுவைத்தது.

அப்போது மீளவும் பென்சிலைத் திரும்பிப் பார்த்தவாறே அழிறப்பர் சொன்னது: “உனது வேலையைப் போலவே எனது வேலையும் மிகவும் பிரயோசனமானது தான்…”

மேலும் குழம்பிப் போன பென்சில் “நீ ஒரு பொறாமைக்கரன்… நீ ஒரு பிரயோஜனமற்றவன்…” என்றுவிட்டது.

உடன் திடுக்கிட்ட அழிறப்பர் “ஏன்?” எனக் கேட்க,

“அழிப்பவர்களைவிட எழுதுபவர்கள் தானே சிறந்தவர்கள்” எனப் பதிலளித்தது.

அதற்கு அழிறப்பர் “தவறுகளை அழிப்பது தானே சரியான விடயங்களைக் கொண்டுவரும்” எனக் கூற ஒருகணம் பென்சில் திகைத்து நின்றது.

பின் தலையை நிமிர்த்தி “ஆம் நீ சொன்னது உண்மைதான் தோழனே…!” எனக் கூற சந்தோசத்துடனேயே அழிறப்பர் “நீ இன்னும் என்னை வெறுக்கிறாயா?” எனக் கேட்க “இல்லை… இனி நான் என் தவறுகளைத் திருத்துபவர்களை வெறுக்கவே மாட்டேன்” என கைசேதத்தோடு கூறியது.

அப்போது பென்சில் “நான் சரியானவற்றை அழிக்கவே மாட்டேன்” என்றது.

அதற்கு பென்சில் “என்றாலும் ஒவ்வொரு நாளும் நீ சிறிதாவதையே நான் காண்கிறேன்” என்றது.

உடனே “ஏனெனில் ஒவ்வொரு தவறையும் நான் அழிக்கும் போது எனது உடம்பில் ஒரு பகுதியை தியாகம் செய்து விடுகிறேன்” எனப் பதிலளித்தது.

பென்சில் கவலையோடு சொன்னது: “நானும் கூட முன்பிருந்ததை விட சிறிதாகிவிட்டதாய் உணர்கிறேன்”

அப்போது அழிறப்பர் “மற்றவர்களுக்கு நாம் பிரயோஜனம் அளிக்க விரும்பினால் அவர்களுக்காக நாம் தியாகம் செய்யாவிட்டாலே தவிர எதுவும் செய்துவிட முடியாது” என ஆறுதலாய் சில வார்த்தைகள் கூறியது.

அப்போது பென்சில் பேருவகையோடு “நன்பனே! நீ எவ்வளவு பெரிய மனதுடையவன்..! உனது பேச்சு எவ்வளவு அழகானது…!” என்றது. அழிறப்பர் மகிழ்ச்சியடைந்தது. பென்சிலும் மகிழ்ச்சியுற்றது. அதன் பின்பு அவையிரண்டும் அன்போடு வாழ்ந்து வந்தன. அவை பிரியவுமில்லை; முரண்பட்டுக் கொள்ளவுமில்லை.

அரபு மூலத்திலிருந்து தமிழாக்கம்: Siaaf

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s