#‎தய்த்_தேங்கா சாப்பிட்டிருக்கீங்களா?

Capture

தேங்காய் கேள்விப்பட்டிருப்பீங்க… உலகம் முழுதும் அயனமண்டல நாடுகளில் பஞ்சமின்றிப் பரவிப் போயிருக்கின்றது.
தேங்காய் இருக்குது… அதுசரி, இதென்னடா தய்த் தேங்கா என நீங்கள் யோசிப்பது புரிகிறது..!
‪#‎தயிர்த்_தேங்காய் என்பதுதான் எமதூர்ப் பாஷையில் தய்த் தேங்கா என மருவி உச்சரிக்கப்படுகிறது என்பது முதலாவது செய்தி.
தயிர்த் தேங்காயை அறிந்தவர்களுக்கு அதன் தேன் சொட்டும் ரசம் கொண்ட உள்ளீட்டை நினைக்க இப்போதே நாவூறத் தொடங்கியிருக்கும் என்பது இரண்டாவது செய்தி.

சரி விடயத்துக்கு மீண்டும் வருவோமே…
இயற்கை இறையருளால் எமது (முன்னாள்) சிறுமக்கம்‪#‎வெலிகாமம் த்துக்கு அளித்த கொடைகளுள் விசேடமானதுதான் தயிர்த் தேங்காய்.
தென்னை மர இனங்களில் ஒரு பிரத்தியேக இனமாக தயிர்த் தேங்காய் காய்க்கும் மரங்கள் காணப்படுகின்றன.
இம்மரங்கள் வெலிகம மற்றும் அதற்கு 10-15 கிலோமீற்றர்கள் அண்டிய கிராமங்கள் வரைக்கும் பரவிக் காணப்படுகின்றன.

கவனிக்கத்தக்க விடயம் என்னவெனில் குறித்த மரத்தின் கன்றை வேறு ஊர்களுக்கு எடுத்துச் சென்று நட்டியவர்களுக்குக் கூட அவை வளர்ந்து மரமாகிய போதும், தயிர்த் தேங்காய் காய்க்காது சாதாரண தேங்காய்களே காய்த்திருக்கின்றன.
எனவே பிரதேசத்தின் புவியியல் அமைப்பு மற்றும் காலநிலைக்கும் இம்மதுரக் கனியின் உருவாக்கத்தில் பங்கிருக்கும் என்றே கருத முடிகிறது.

ஏனைய தென்னை மரங்களுக்கும் தயிர்த் தேங்காய் மரத்துக்கும் தோற்ற அமைப்பில் வித்தியாசங்கள் ஏதுமில்லை… சாதாரண மரங்கள்தான்; ஒரு தேங்காய்க் குலையில் ஏழெட்டுக் காய்களுக்கு மேல் இருப்பதும் சாதாரண தேங்காயாகத்தான் இருக்கும்.
அரிதாக 2-3 காய்கள் தான் ஒவ்வொரு குலையிலும் தயிர்த் தேங்காயாக மாறியிருக்கும்.
சாதாரண தேங்காயை விட 2-3 மடங்கு அதிகரித்த பாரம் மட்டுமே தயிர்த் தேங்காயை இனங் காண்பதற்கு போதுமான வழியாகும்.
தேங்காய் உடைக்கப்படும் போது ஏனைய தேங்காய்கள் போன்று நீர் இருக்காது. சிலவேளை இருக்கும் சொற்ப அடர் நீரும் மதுரமிக்க சுவை கொண்டிருக்கும். எனினும் இது மிக அரிதானது.
உடைத்ததும் தேங்காய் உள் பகுதி வழவழப்புடனும் ஒரே வடிவமின்றிய ஒழுங்கீனத்துடனும் இருக்கும்.
பார்ப்பதற்குத் தயிரை ஞாபகமூட்டுவதே தயிர்த் தேங்காய் என பெயரிடப்படக் காரணமாயிருக்கும் என ஊகிக்க முடிகிறது.

தயிர்த் தேங்காய் கிடைப்பது மிக அரிதாக இருப்பதால் பெறுமதியும் எகிறியிருக்கும். சிறுவயதுகளில் 100-150 ரூபாய்களுக்குள்ளால் பெற முடிந்த தயிர்த் தேங்காய்களை 350/- ரூபாய்களுக்குக் குறைவாக இப்போது பெற முடிவதே இல்லை.
அதுவும் ஓரளவு பருமனுள்ள காய்க்கு 450/- ரூபாய் வரைக்கும் செலவிட வேண்டியிருக்கும்.
வேகமாக மரங்கள் அழிக்கப்படுவது தயிர்த் தேங்காய்களை அரிதாக்கியுள்ளதோடு விலையையும் ஏற்றி விட்டிருக்கின்றது.
பெறுமதி அதிகமாதலால் கடைகளிலும் சாதாரண தேங்காய் போலல்லாது இறக்குமதி ரக, உயர் ரக கனிவர்க்கங்கள் போன்று ‘நெற்’ உறைகளில் இடப்பட்டே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

தயிர்த் தேங்காய் உட்கொள்ளப்படும் போது வெறுமனே சர்க்கரை, தென்னம் பாணி அல்லது கித்துள் பாணி இணைத்தும் உட்கொள்ளப்படும்.
அல்லது ‪#‎மஸ்கட் என பிரதேசத்தில் அழைக்கப்படும் அதீத இனிப்புச் சுவை கொண்ட ‪#‎பலகாரம் செய்தும் சாப்பிடுவார்கள். இது பெருநாட்களில் ஓரளவு விஷேடமாக இருக்கும்.
அண்மைக்காலமாக எலுமிச்சம் சாறு, சர்க்கரை கலந்து‪#‎ஜூஸ் செய்யப்படுவதும் உண்டு.
அடுத்து பெரிதாக அறியப்படாத வகையாக, தென்னம் பாணி அல்லது கித்துள் பாணியை உடைக்காமலே தயிர்த் தேங்காயினுள் இட்டு தீயில் இலகுவாகச் சுட்டு எடுக்கப்படும் ‪#‎வட்டிலப்பம் போன்ற இனிப்புப் பண்டமும் உண்டு. எனினும் இச்சுவை மிகு பலகாரம் சாப்பாட்டு வகைகளுக்குப் பேர்போன வெலிகாமத்தவர் மத்தியில் அவ்வளவு பிரபலமின்றி இருப்பது வியப்புத்தான்.

முக்கியம் மிக்க இயற்கையின் கொடையான‪#‎தய்த்தேங்காய் க்குக் குறிப்பிடத் தகுந்த மருத்துவப் பெறுமானங்களோ கலாசாரப் பெறுமானங்களோ இல்லை என்பது இவ்விடம் சொல்லத்தக்கது.
வணிக சமூகமான ‪#‎வெலிகம பிரதேசத்தவர்கள் தயிர்த் தேங்காய் மற்றும் அதன் உற்பத்திகள் மூலமாக அதற்குரிய வணிக-பொருளாதாரப் பெறுமானத்தையும் உண்டாக்காமலிருப்பதும் பெருத்த ஏமாற்றம்தான்.
எதிர்வரும் காலங்களில் அழிந்து போகும் ஆபத்து அதிகம் கொண்ட தயிர்த் தேங்காய் பற்றி விஞ்ஞானபூர்வ ஆய்வுகள் மேற்கொண்டு அதன் உற்பத்தியைப் பெருக்கவும் வணிக வாய்ப்புக்களை உருவாக்கவும் நிறைய வாய்ப்புள்ளன.
எனினும் சம்பாதிப்பும்-நுகர்வும் தான் வாழ்க்கை என சமூகத்தின் சகல தரப்புக்களிலும் ஆகிப் போன முழுமையான சிந்தனை வரட்சி கொண்ட வெலிகாமத்து மக்ககளிடம் ஆக்கபூர்வ-Creative அம்சங்களை எதிர்பார்க்க நீண்ட காலம் உழைக்க வேண்டியிருக்கிறது. இன்ஷா அல்லாஹ்…

அதுசரி இந்த போஸ்ட்ட டைப்பி முடிஞ்ச இக்கணம் எலுமிச்சம் சாறு கலந்த தய்த்தேங்கா ஜூஸ் அருந்திக் கொண்டிருக்கிறேன்… இதோ 👉👇🙌
நீங்களும் வாரீங்களா நண்பர்களே!!! 🙌🙌🙌

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s