வீழ்த்த முடியா வீரன் – சில சுவாரஷ்யங்கள்

Capture

‪#‎முஹம்மத்_அலி‬ மரணித்து பேஸ்புக்கில் அந்த‪#‎ட்ரெண்டிங்‬ கும் ஓயப் பார்க்கின்றது.
இக்கணம் கிடைத்த ‪#‎நளீம்_ஹாஜியார்‬ முஹம்மத் அலியை சந்திக்கும் புகைப்படமும் இன்னும் சிலவும் ஓரிரு சுவாரஷ்யங்களை மனத்தில் கிளறி எடுத்துவிட்டன.

முஸ்லிம் உலகு தொடர்ந்து இறங்கு முகத்தை கண்டுவந்த நெகட்டிவ் ரிஸல்ட்டுகளாகவே அனைத்திலும் பெற்ற அக்காலத்தில், முஹம்மத் அலி என்ற நபி நாமம் பொருந்திய ஒருவர் குவித்த அசாத்திய வல்லமை கொண்ட வெற்றிகள் முஸ்லிம் உலகெங்கிலும் சிலிர்ப்புக் கொண்டு பார்க்கப்பட்டது.

“வண்ணத்துப் பூச்சி போல் பறந்து… தேனி போல் கொட்டுவேன்” என்று பாடியவாறே அவர் எதிரிகளை நொக்-அவுட் டில் வீழ்த்தியே விடுவார்.
வெறும் 22 வயதும் 39 நாட்களில் அவர் பெற்றுக் கொண்ட அன்றைய அதிபார (Heavy Weight) சாம்பியன் ஸொன்னி லிஸ்டனுடனான போட்டியும் 1975ம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இடம்பெற்ற ஜோ ஃபிரேஸியருடனான போட்டியும் நான் சிலாகிப்பவை.
(“வண்ணத்துப் பூச்சி போல் பறந்து… தேனி போல் கொட்டுவேன்” என்ற அவரது புகழ்மிகு குத்துச்சண்டை வாசகம் ஆங்கிலப் பாடல் ஒன்றாக வெளிவந்ததாகவும் ஞாபகம்.)

1970ம் ஆண்டு இடம் பெற்ற போட்டியொன்றிலேயே முதன் முறையாக முஹம்மத் அலி தோல்வியுற்றிருந்தார். அப்போட்டி ஜோ ஃபிரேஸியருடனான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
(அவர் பங்கேற்ற 61 குத்துச் சண்டைக் கோதாக்களில் 5 இல் மட்டுமே தோல்வியுற்றிருந்தார் என்பதைக் கவனிக்க.)

பின் மீண்டும் 1975ல் ஜோ ஃபிரேஸியருக்கு சவால் விடுக்கப்பட்டு போட்டிக்கான ஏற்பாடுகளும் பரப்புரைகளும் நிறையவே செய்யப்பட்டன.
35 க்கும் மேற்பட்ட நாடுகளில் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புக் கென ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் இலட்சக் கணக்கானோர் இந்த கோதாவைக் காண்பதற்கு அக்காலத்திலேயே ஏற்பாடுகள் தடல்புடலாக செய்யப்பட்டிருந்தன.
(இங்கு முஹம்மத் அலியை வைத்து கோடிக் கணக்கில் காசுபார்த்த பண முதலைகளது கதை தனி சாப்டர்.)

எல்லாவற்றுக்கும் மேலால் இது அன்றைய கிறிஸ்தவ உலகுக்கும் முஸ்லிம் உலகுக்கும் இடையிலான பெரும் போராகவே மக்கள் எண்ணச் செய்யப்பட்டனர்.
போட்டி ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற, உலகெங்கிலும் முஸ்லிம்கள் இப்போட்டியில் முஹம்மத் அலி வெற்றி பெற வேண்டும் என்பதற்காய் பிரார்த்தனைகளிலும் மார்க்க அனுஷ்டானங்களிலும் ஈடுபடலாயினர்.
இலங்கையிலும் பல இடங்களிலும் மார்க்க அனுஷ்டானங்கள் பரவலாக இடம்பெற்றன.
நமதூர் அந்நாள் ‪#‎சிறுமக்கம்‬ வெலிகாமமும் விதிவிலக்கின்றி பிரார்த்தனைகளும் அனுஷ்டானங்களுமாக இருந்தது.
‪#‎பத்ரு_பள்ளிவாயலில்‬ அன்றைய தினம் விஷேட நிகழ்ச்சிகள் ஏற்பாட்டோடடு ‪#‎பத்ர்_மௌலித்‬ உம் ஓதப்பட்டு பிரார்த்தனைகளும் அனுஷ்டானங்களும் நிறைய நிகழ்ந்தன.
(பத்ர் மௌலித் முஸ்லிம்களுக்கும் மக்கத்து இணைவைப்பாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த முதலாவது நேரடிப் போரில் முஸ்லிம்கள் பெற்ற வெற்றியை சிலாகித்து புகழ்பாடும் செய்யுள் வகை என்பது கவனிக்கத்தக்கது. அதே மௌலித் தான் இங்கும் பாடப்பட்டது.)

கோடானு கோடி அன்றைய முஸ்லிம்களின் இதயத் துடிப்புக்கள் ஒவ்வொன்றும் வேண்டிக் கொண்டது போன்றே அலி மாபெரும் வெற்றியை அன்றைய போட்டியில் பெற்றுக் கொண்டார்.
அந்தக் கோதாவுக்கு முன் Muhammad Ali அளித்திருந்த பேட்டியின் அனல் பறக்கும் வார்த்தைகளைக் கவனித்துப் பாருங்கள்:
“I’ve done something new for this fight. I done wrestled with an alligator, I done tussled with a whale; handcuffed lightning, thrown thunder in jail; only last week, I murdered a rock, injured a stone, hospitalized a brick; I’m so mean I make medicine sick.”
( பேட்டியின் வீடியோ லிங்க்: https://www.youtube.com/watch?v=dGk0R63C0eM )

அவரது வார்த்தைகள் கூர்மையானவை; இளைஞர்களைப் புத்துணர்ச்சியூட்ட வல்லவை; ஓர் அற்புத வீரன் அவர்… குத்துச் சண்டை கோதாவுக்கு வெளியே அறவுணர்வு மிகுந்த மானுட நேயன் அவர்… வியட்நாமிய யுத்தத்துக்கு எதிராக அமெரிக்க மக்களை ஒன்றுதிரட்டிய அவரது பணியும் வீச்சு மிகுந்த பரப்புரைகளும் மட்டுமே போதும் நாம் அவரை நேசிக்க…
நபியவர்கள் மீது அபரிமித அன்பு பூண்ட அவரது பாவங்களை மன்னித்து அல்லாஹ் அவருக்கு அருள்புரியட்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s