நிகாப் என்பது…

scarf-651554

 

நிகாப் பற்றிய எமது நிலைப்பாடு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் பரவலாக எழுந்து வரும் இவ்வேளையில், அதற்கான மிகச் சுருக்கமான பதிலாக இப்பதிவு இடப்படுகிறது. அதேநேரம் ஹிஜாப், பர்தா, நிகாப், புர்கா என்ற வெவ்வேறான ஆடை முறைமைகளைக் குறித்தும் வாசிப்போர் தெளிவுடன் இருப்பர் என நம்புகிறேன். இங்கு நான் முழு முகம், கையெல்லாம் மூடிக் கொண்ட பாலைவன ஆடை முறையான நிகாப்-புர்கா குறித்தே பேசுகிறேன் என்பது குழந்தைகளுக்கும் புரியும் என மீண்டும் நம்புகிறேன்.

 

நாம் விடயத்துக்கு ஷாபிஈ மத்ஹபின் முக்கிய இமாமான நவவி(ரஹ்) அவர்களது மஜ்மூஃ நூலிலிருந்து அவர் எடுத்தாண்டுள்ள கருத்துக்களை முன்வைத்துத் துவங்குவோம். அதில் ஸூரா நூரின் 31ம் வசனத்தை விளக்குகின்ற போது இமாம் அவர்கள் முகம், கை உட்பட்ட பகுதிகள் திறந்திருக்கலாம் என்பதைத் தெளிவாக வலியுறுத்துகிறார்.

 

24:31

24:31 وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ‌ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌ ؕ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏

24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

 

இது தவிர்த்து தப்ஸீர் ஆசிரியர்களான இமாம்கள் தபரி, இப்னு கஸீர், குர்த்துபி, ஃபக்ருத்தீன் ராஸி, இப்னு ஆஷூர் உட்பட்ட ஏராளம் முபஸ்ஸிர்கள் இக்கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம். ஒவ்வொருவரும் ஸூரா நூரின் குறித்த ஆயத்துக்கான விளக்கத்தை அவதானித்துப் பாருங்கள்.

 

மத்ஹப் ரீதியாக நோக்கும் போதும் ஹனபி, ஷாபிஈ, மாலிகி எதுவுமே முகம் மூடக் கூறாது, திறப்பதையே வலியுறுத்தியுள்ளன. ஹன்பலி மத்ஹபில் மட்டுமே இரண்டு வெவ்வேறு நிலைப்பாடுகளோடு வெவ்வேறு அணியினர் காணப்படுகின்றனர். ஹன்பலி மத்ஹபின் பெரும் இமாமான இப்னு குதாமா தனது முஃங்னி பிக்ஹுக் களஞ்சியத்திலே தனது நிலைப்பாடாக முகம் மூடக் கூடாது என்பதே பலமான கருத்து என்கிறார்.

 

அல்லாஹ்வும் ரஸூலும் அதன் வழி வந்த இமாம்களும் தெளிவாகச் சொன்ன உண்மை இதுவே… இதில் எந்த தவறும் இருக்காது. எனவே ஒற்றைக் கண்ணனாக விடாக் கண்டனாக இல்லை முகம் மூடத்தான் வேண்டும், திறக்கவே கூடாது போன்ற பாலைவனக் கருத்தியல்களை வாந்தி எடுத்துக் கொண்டிருப்போமாயின் குர்ஆன், ஹதீஸ், அதனை விளக்கிய மேற்கூறிய ஒவ்வொரு இமாம் என அனைத்தையும் இணைத்தே நாம் நிராகரிக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

நிகாப் விடயத்தில் கடுமையான போக்கைப் பின்பற்றிய ஸவூதி அரசும் தற்போது ஷரீஆவுக்கு நெருக்கமானதாக தனது உத்தியோகபூர்வக் கருத்தை மாற்றி முகம் திறக்கலாம் என்ற நிலைப்பாட்டை ஏற்றிருக்கின்றது.

 

இவையொன்றும் நான் சொந்தமாக எனது மூளையில் தயாரித்துச் சொல்லவில்லை. குர்ஆன், ஹதீஸும் அதனை விளக்க வந்த இமாம்களும் எடுத்துக் கூறிய சத்தியத்தையே இங்கு தொகுத்துத் தருகிறேன். நீங்கள் இக்கருத்துக்களை நிராகரிப்பதற்காக முல்லாத்தனமாக இதுவெல்லாம் யூத சதித் திட்டம் போன்ற முட்டாள்தனம் மிக்க கருத்துக்களையெல்லாம் கூறிக் கொண்டிருந்தால் அறிவுமயப்பட்ட இவ்வுலகில் அதனை ஏற்க யாருமில்லை என்பதை நம் உள்ளூர் மவ்லவிகள் நன்கு அறிந்துகொள்ளட்டும்.

 

இறுதியாக இங்குள்ள உலமாக்களுக்கு பிக்ஹு விடயங்களிலே கருத்து பேதங்கள் ஸஹாபாக்கள் காலம்தொட்டு இருந்துவருவது நன்கு தெரிந்திருக்கும். அவ்வகையில் முகம் மூடுவதற்கும் சிலர் கருத்துச் சொல்லியிருக்கின்றனர். ஆனால் அவை மிகப் பலவீனமான ஆதாரங்கள் கொண்ட நிலைப்பாடுகள். என்ற போதிலும் அவர்கள் அக்கருத்துக்களைக் கொண்டிருப்பதை நாம் எப்போதும் ஆட்சேபிக்கவில்லை.

ஆனால், அதுதான் சரியான கருத்து என்பது போல் மக்கள் மத்தியில் திணிக்க முயலும் முல்லாக்களுக்குச் சொல்லிவைக்க விரும்புகிறோம்… உங்களது கருத்துத் திணிப்புக்கு எதிராக மக்களுக்கு சரியான கருத்தைக் கொடுப்பதற்கு நாங்கள் எப்போதும் முன்நிற்போம்.

 

இக்கருத்துக்கள் எவருக்கும் ‘குத்தி’ எழுதப்படவில்லை. உண்மையை உரைக்க எவருக்கும் அருகதையுண்டு. மாற்றுக் கருத்துக்களை எவரும் கலந்துரையாடலாகப் பதிவு செய்யலாம். ஆனால், இக்கருத்துக்களைக் கூற முடியாது எனக் கருத்துப் பாஸிஸம் செய்ய எந்த நபருக்கும் தகுதி இல்லை என்பதை நான் கூறிப் புரிய வேண்டியது இல்லை என நினைக்கிறேன்.

 

நிகாப் என்ற பலவீனமான கருத்தியலுக்கு எதிரான முதல் அறிமுக எழுத்துக்கள் மட்டுமே இவை. இன்ஷா அல்லாஹ் இது இன்னும் வளரும்.

அல்லாஹ் நம் அனைவரையும் நன்மைகளில் ஒன்றிணைத்து வைப்பானாக!

 

தொகுப்பு: எம்.எஸ்.எம். ஸிஆப்

ஷரீஆத் துறை மாணவன்.

 

மூலம்: http://www.youtube.com/watch?v=8xBek7Bm-lI&feature=youtube_gdata_player

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s