நிகாபுக்கு ஷரீஅத்துக்குட்பட்ட ஆதாரங்கள் உண்டா?

women-in-hijab-getty-640x480

நிகாபைக் குறித்து (அதுதான் முகம் மூடுங்க என்றாங்களே அவுங்க) பேசுபவர்கள் ஷரீஅத்துக்குட்பட்ட ஆதாரங்களை முன்வைப்பதில்லை. அவர்கள் வெறுமனே சமூகத்தில் நடக்கும் சில பிறழ்வு நடத்தைகளைக் கொண்டு பயப் பிராந்தி உண்டுபண்ணி தம் மூளைக்குள் சொருகி வைத்திருக்கும் முகத்தை மூடுதல் என்ற வட இந்திய, பாலைவனத்து நிலைப்பாட்டை சரியென்று மக்கள் மத்தியில் திணிக்கப் பார்ப்பதைக் காணலாம்.

பார்வையைத் தாழ்த்துதல் என்ற அல்குர்ஆனியத் தர்பிய்யத்தை நடைமுறைப்படுத்திப் பயிற்றுவிக்கத் தெரியாத கையாலாகாத்தனம் இங்கு இதற்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருப்பது கண்கூடு. எவ்வாறிருந்த போதும் சில சமூகப் பிறழ்வுகளைக் காரணம் காட்டி முகம் மூடுதலைத் திணிக்க முடியாது என்பதுவே நம்மால் தீர்க்கமாக அறிந்துகொள்ள முடியுமானதாகும்.

அல்குர்ஆன் தெளிவாகவே பேசுகிறது:

24:30. (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்.

24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்.

 

பொதுவில் எந்தவொரு விவகாரத்திலும் மனிதன் என்பவன் தீவிர நிலைப்பாடுகளின்பால் ஈர்க்கப்பட்டு சென்றுவிடுவது வழக்கமாக நாம் கண்டு கொள்வதேயாகும். ஆடை விடயத்திலும் ஒரு சாரார் படுபயங்கரமான ஆடை அணிந்தும் நிர்வாணிகளான கலாசாரத்துக்குள் புகுந்து கொண்டிருக்க, மற்றொரு சாரார் அடுத்த பக்கமாக முழு உடலையும் மூடி அதனோடு முகத்தையும் மூடி விட்டுவிட்டனர். அதில் பலர் முகத்துடன் சேர்த்து மூளையையும் மூடி வைத்து பெண் என்ற மகத்தான இறை படைப்பைக் கேவலப்படுத்துகின்றனர் என்பது சமகால சமூகம் தெளிவாகக் கண்டுவரும் உண்மையாகும்.

 

இந்த இரண்டு அதி தீவிர நிலைப்பாடுகளுமே மனித குலத்துக்கு எதிரான பாதகங்களை ஏற்படுத்திட வல்லவை. எனவே எமது எழுத்துக்கள் இரண்டு முட்டாள் நிலைப்பாட்டு சாராரினதும் கருத்துக்களையும் நடைமுறைகளையும் தகர்த்தெறிவதுடன் இணைந்ததாக இருக்கும்.

 

அடுத்து முஸ்லிம் சமூகத்துக்குள்ளாலும் முகம் மறைத்தல் விடயத்தில் இரு நிலைப்பாடுகள் நிலவுவதைக் காணலாம். முகம் உட்பட தலையையும் மறைப்பது தேவையில்லை போன்றநிலைப்பாடுகளில் துருக்கிய ஸூபித்துவ மதகுருவான பத்ஹுல்லா குலான் போன்றவர்கள் இருக்கின்றனர். இது அபத்தமானது. இஸ்லாமிய ஷரீஆ சொல்ல வரும் ஆடை முறைமைக்கு முரணானது.

நிகாப் என்னும் நடைமுறை குறித்து கருத்துச் சொல்லும் சிலர் அது இஸ்லாத்துக்குப் புறம்பாக ஏற்பட்ட ஒரு வழக்கம், அது ஒரு நூதனம் (பித்அத்), வழிகேடு என்ற ரீதியில் தம் நிலைப்பாட்டை முன்வைக்கின்றனர். இது மேற்குலகம் சார்பான நிலைப்பாடாகக் கொள்ளப்படுகின்றது.

 

மற்ற சாரார் கிழக்குலகின் பெண்மை ஒடுக்கப்படல் கருத்து நோய்களால் பாதிப்புற்று நிகாப் என்பது ஏதோ இஸ்லாத்தின் பிரிக்க முடியாத அடிப்படை அம்சம் போன்று கூப்பாடு போடுகின்றனர். அவர்களின் அறிவற்ற நிலைப்பாட்டின்படி முகம் மூடாதோரை பெரும் பாவிகள் ரேஞ்சுக்குத் தள்ளிவிடுகின்றனர். இவர்களது பார்வையின்படி முந்தானை, ஹிஜாப் மட்டும் போதுமானதல்ல. முகத்தை மூடாதோர் மேற்குலகால் பாதிக்கப்பட்டோர் என விதண்டாவாதிப்பர். இதனை நடைமுறை ரீதியில் விளங்குவதாயின் தாலிபானிய மனத் தாக்கத்தின் புற வெளிப்பாடு என்பது சாமானிய மனிதனுக்கும் புரியும். இது இஸ்லாமியப் பனுவல்களின் அடிப்படையில் தோன்றிய இரண்டாவது தீவிர நிலைப்பாடாகும்.

 

இங்கு ஒரு முஸ்லிம் அறிய வேண்டியது அவன் மேற்குலகின் மீதும் சாராது கிழக்குலகின் மீதும் சார்ந்திருக்காது இஸ்லாத்தின் பக்கம் மீள வேண்டும். இஸ்லாமிய ஷரீஆவின் திட்டவட்ட (கத்இய்யத்) வசனங்களுக்கும் ஸஹீஹான ஹதீஸ்களிடமுமே மீள வேண்டும். இஸ்லாம் அல்லாஹ்வின் ரஹ்மத்துகள் செறிந்த சமநிலை மார்க்கமாக விளங்குகின்றது. பகுதியளவான சட்ட வசனங்களுக்கும் இஸ்லாமிய ஷரீஆவின் ஒட்டுமொத்த நோக்கங்களுக்கும் இடையே சமநிலை பேணி ஒரு தீர்வை அடைய முயற்சிக்க வேண்டும். ஷரீஆவின் மாறா அடிப்படைகள், கால மாற்றத்தைப் புரிந்து தீவிரத் தன்மையோ பொடுபோக்கோ இன்றி நாம் செயல்பட வேண்டும்.

 

பிடிவாதம், வெறி போன்றவற்றைத் தாண்டி நாம் இது குறித்துப் பேசுவோம். மக்கள் ஒவ்வொருவருக்கும் நிகாபின் உண்மையான கருத்தை உள்வாங்கச் செய்வோம். நிகாப் இஸ்லாத்தில் ஜாஇஸான (ஆகுமான) ஒன்று, சூழலைப் பொறுத்து அது முஸ்தஹப்-மக்ரூஹ் (விரும்பத்தக்கது-வெறுக்கத்தக்கது) போன்ற நிலைப்பாடுகளுக்கு வரலாம் என எமது கண்ணியமிக்க இமாம்கள் காட்டிய வழிகாட்டல்களை நிதானத்துடன் பரவச் செய்வோம்.

 

ஒரு சிலர் பம்மாத்துக் காட்டி நிகாப் ஃபர்ளு போன்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்த முனையும் உள்ளூர் முல்லாக்களுக்கு நாம் ஒரு போதும் அனுமதியோம். அந்த அடிப்படையற்ற கருத்தியல் அவர்கள் கண் முன்னாலேயே சரிந்து விழச் செய்வதில் இறையருளால் நாம் வெற்றியீட்டுவோம்.

 

இப்பத்தியை முடிக்க முன்னால் மீண்டும் ஞாபகப்படுத்துகிறோம் நாம் யாரையும் எதிர்த்து இக்கருத்துக்களை எழுதவில்லை. மாறாக ஒரு சிலர் பரப்ப முனையும் இஸ்லாத்துக்கு முரணான கருத்துக்களைத் தீவிரமாக எதிர்த்தே எழுதுகிறோம். இந்த எழுத்துக்கள் இது போன்ற அனைத்து வகை சமூகத்துக்கு எதிரான மூடக் கருத்துக்களைத் தோற்கடிக்கவெனவும் புறப்படும்.

இதற்கப்பால் ஸலவாத்தைப் பரப்புவதா? ஹுப்புந் நபிக்காக உழைப்பதா? தொழுகைக்கு மக்களைத் திரளாக அணிவகுக்க செய்வதா? பித்அத்-ஷிர்க் ஒழிப்பா?

அனைத்திலும் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தீவிரமாகப் பணியாற்றுவோம்.

அதற்குமப்பால் சமூகத்தின் கல்வி, பொருளாதார, அரசியல் என சகல மாற்றங்களுக்கும் நாம் அச்சாணியாய் இருப்போம். அல்லாஹ்வின் அருளால் உயர்ந்த இம்மை-மறுமைப் பயன் மிக்க சமூகத்தை உருவாக்குவோம்.

 

ஆம். நிகாப் என்ற பலவீனக் கருத்தைக் கழற்றியெறிகின்ற எழுத்துக்கள் இன்னும் வேகமாகத் தொடரும்.. இன்ஷா அல்லாஹ். ஒவ்வொரு குர்ஆன் வசனமும் நபி மொழியும் இங்கு எடுத்தாளப்படும்… இன்ஷா அல்லாஹ்.

 

எம்.எஸ்.எம். ஸிஆப்.

ஷரீஆத் துறை மாணவன்.

 

நிகாப் லில் மர்ஆ நூலை அடிப்படையாகக் கொண்டு தொகுத்துள்ளேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s