வஹியின் காலத்தில் நிகாப் ஷரீஆவிலேயே இல்லை

Muslim-dress-490033

நிகாப் குறித்த இஸ்லாமிய வாதப் பிரதிவாதங்கள் அனைத்தும் உணர்ச்சிபூர்வமானவற்றை அடிப்படையாகக் கொண்டே அணுகப்படுகின்றது. அதனால் தம் கருத்துக்கு மாற்றமான எந்தக் கருத்தையும் அவர்கள் ஏற்க நினைப்பதும் இல்லை. குறிப்பாக சென்ற நூற்றாண்டில் வட இந்தியாவில் தோற்றம்பெற்ற முல்லாயிச மதகுருக்கள் இந்தக் கண்மூடிப் பிரச்சினையில் திக்கற்று நிற்கின்றனர்.

 

ஆனால் அறிவைத் தேடும் ஒரு இஸ்லாமிய மாணவன் சத்தியத்தை சத்தியமாக ஏற்க முன்வர வேண்டும். தன் கருத்து பிழையெனப்படும் போது அதனை ஏற்கவும், மாற்றுக் கருத்துகளுக்கான வாய்ப்புகளை மதித்து நடந்து கொள்ள வேண்டும். இன்று எமது தொடர் எழுத்துக்களுக்கு நிகாப் என்ற பலவீனமான ஆதாரம் கொண்ட கருத்தை வாஜிப்-ஃபர்ள் தரத்துக்குக் கொண்டுவந்து மக்களை முட்டாளாக்க நினைக்கும் ஒரு சிறு குழு முல்லாக்களின் வீம்புக் கருத்துக்களை நீர்த்து விடச் செய்வதே நமது முழுமுதல் நோக்கம் என நாம் தெளிவாகச் சொல்லிவைக்கிறோம்.

 

யா அல்லாஹ் சத்தியத்தை சத்தியமாகக் காட்டி, அதனைப் பின்பற்றுவோருக்கு அருள்புரிவாயாக! அசத்தியத்தை அசத்தியமாகக் காட்டி, அதனைத் தவிர்ப்போருக்கும் அருள்புரிவாயாக! கருத்து முரண்பட்ட விடயத்தில் நமக்கு சத்தியத்தை நமக்குக் காண்பிப்பாயாக!

 

சரி. அடுத்த ரவுண்டாக குர்ஆனின் கருத்தில் நிகாப் எனும் முகமூடல் எங்குமே பிரயோகிக்கப்பட்டதில்லை எனக் காண்போம்:

> ஸூரா நூர் 30, 31ம் வசனங்களில் முஃமினான ஆண்-பெண்பாலாருக்கு பார்வையைத் தாழ்த்தும் கட்டளையை முகம் மூடும் சட்டம் அமுலில் இருக்கும் சமூகத்துக்கு அல்லாஹ் இறக்கியிருக்க வாய்ப்பே இல்லை.

இதனோடு இணைத்து முதல் பார்வை உனக்குரியது. இரண்டாம் பார்வை ஷைத்தானுக்கு…. என்ற ஹதீஸ் தொடரை நோக்கலாம்.

பார்க்க: ஸஹீஹ் ஜாமிஉ ஸஃஙீர் 7953, 1118.

பல கிரந்தங்களில் பதியப்பட்ட இவ் ஹதீஸ் என்ன முகம் மூடல் சட்டமிருந்த சமூகத்துக்கா சொல்லிக்கொடுக்கப்பட்டது?

 

> “இயல்பாக வெளித் தெரியும் அழகு தவிர” இதுவும் நூரின் 31ம் வசனத்தின் பிரபல பிரயோகம். இது குறித்த விளக்கத் தொகுப்பை இமாம் ஸுயூத்தியின் துர்ருல் மன்ஸூரில் பார்க்க. மணிக்கட்டு, முகம், சுர்மா, மோதிரம் என அக்கருத்துக்கள் விரிகின்றது. அங்கு எவரும் முகத்தைக் குறிப்பிட்டுவிடவில்லை.

 

> அதே வசனத்தின் “அவர்கள் முந்தானைகளை தம் மார்பகங்கள் மீது இட்டுக் கொள்ளட்டும்” என்ற பகுதி தலை மற்றும் மார்பை மூடுவதைக் குறிக்கின்றது. முகம் மூடுவது அவசியமெனின் அல்லாஹ் இங்கேயே குறிப்பிட்டிருக்கலாமே.

 

> அடுத்து ஸூரா அஹ்ஸாபின் 52ம் வசனம்:

33:52. இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே – ஹலால் இல்லை – மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.

 

இங்கு இடம்பெற்றுள்ள “அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்த போதிலும்” என்ற பிரயோகம் முகம் திறப்பது தடுக்கப்பட்ட சமூகத்திலா இறங்கியது என்பதை ஆலிம்சாக்கள் விளங்கப்படுத்தலாம்.

 

> “ஜலாபீபிஹின்ன” என்ற சொற்றொடரைத் தான் தம் வலுமிக்க ஆதாரச் சொல் போன்று இத்தகையோர் பேசுவர். இதற்கு பிரபலம் மிக்க அனைத்து குர்ஆன் விளக்கவுரையாளர்களதும் கருத்தைத் அவர்களது மூல நூலிலிருந்து திரட்டிக் கொடுத்தாலும் நம் விடாக்கண்டர்களது மூளைக்குப் படவே படாது. தபரி, குர்துபி, இப்னு கஸீர் உள்ளிட்டு பலரதும் ஆதாரங்கள் இவர்களுக்கு கண்ணில் தெரியாது. கேட்டால் ஜில்பாப் முகத்தை மூடுவதுதான் என்பர். ஆதாரம் வாட்ஸப், இந்த ஆலிம்சாவின் வொய்ஸ் மெசேஜ் என்பர்.

ஷரீஅத்தின் ஒரு விவகாரத்தில் இவ்வளவு பொடுபோக்குத் தனமாக நடந்துகொள்வது எவ்வளவு அபாயகரமானது என்பதை இந்த மவ்லவிகள் உணர மாட்டாத ஊனம் கொண்டவர்களா?

உண்மையில் இவர்கள் பரிதாபத்துக்குரிய குறையறிவு கொண்டவர்களே.

 

ரைட். நண்பர்களே! முகம் மூடல் என்பது ஷரீஅத் சட்டம் ஒன்றே அல்ல என குர்ஆனின் கருத்துக்கள் பற்றிய தெளிவான நோக்குடன் இப்பத்தியை நிறைவு செய்கிறேன்.

அடுத்தடுத்த பத்திகள் நிறைவான கருத்துக்களும் சுவாரஷ்யமான வாசிப்புடனும் வரும்.

மக்களுக்கு தம் பலமற்ற கருத்தைத் திணிக்கும் முல்லாத்தனத்துக்கு எதிராக எப்போதும் இருப்போம்.

வல்லவன் அல்லாஹ் நம்மை நன்மைகளில் ஒன்றுசேர்த்துவிடட்டும்!

 

நிகாப் லில் மர்ஆ நூலிலிருந்து தொகுப்பு:

எம்.எஸ்.எம். ஸிஆப்,

ஷரீஆத் துறை மாணவன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s