ICT-5 கற்கைநெறிகள்

14352572_949675751822062_7450792961566195805_o

 

இலங்கையில் தொழில்வாண்மை நோக்கில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஏராளம் கற்கை நெறிகள் அவ்வவ் துறைசார்ந்து காணப்படுகின்றன. அரசாங்க கல்வி நிறுவனங்களில் #திறன்விருத்தி_மற்றும்_தொழிற்பயிற்சி_அமைச்சின் கீழ் இயங்கும் #இலங்கை_தொழிற்பயிற்சி_அதிகாரசபை எனப்படும் #Vocational_Training_Authority இன் கற்கை நிலையங்கள் (VTC) நாடுபூராகவும் பரந்து காணப்படுகின்றன.

#Vocational_Training_Centers மூலமாக 60 க்கும் மேற்பட்ட #தொழில்வாண்மைக்_கற்கைநெறிகள் மிகக் குறைந்தளவான கட்டணத்தில் வழங்கப்படுகின்றன. பொதுவில் இலவசமான பல்வேறு கற்கை நெறிகளுடன் 5000/- துவங்கி 40,000/- வரையே மொத்தமான கட்டணமும் உள்ளது. எனினும் தமிழ் பேசும் மாணாக்கர் இவற்றின் மூலம் பெறும் பயன் மிக மிகக் குறைவாகவே உள்ளது. மாற்றாக நமது மாணவர்கள் இங்கே மிகக் குறைந்த கட்டணத்துக்கு வழங்கப்படும் கற்கை நெறிகளை பல இலட்சங்கள் செலவளித்து விளம்பரங்களூடாக ஈர்க்கப்படும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அள்ளுண்டு சென்று கடன்பட்டு வீணே பணத்தை வாரியிறைக்கும் அவல நிலையே காணப்படுகின்றது.

சரி விடயத்துக்கு வருகிறேன். வரும் வாரம் 26, 27ம் திகதிகளில் மாத்தறை மாவட்டத்துக்கான குறிப்பிட்ட அதிகாரசபையின் கீழ் வழங்கப்படும் கற்கைகளில் மிகத் தரமான கற்கைநெறியான #தகவல்_தொழில்நுட்ப_டிப்ளோமா வை வழங்கும் முழுநேர ICT-5 (வகுப்பு நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை 8.30AM-4.15PM) கற்கைநெறிக்கான நேர்முகத் தேர்வுகள் நடாத்தப்பட்டு அக்டோபரில் கற்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கற்கை நெறிக்கான மொத்தக் கட்டணமே வெறும் 40,000/- ரூபாய்களாகும். இதே கற்கைநெறிக்கு தனியார் துறையை நீங்கள் நாடினால் குறைந்தபட்சம் ஒன்றரை இலட்சங்கள் வரைக்கும் செலவிட வேண்டியிருக்கும்.

இக்கற்கைநெறி இலங்கை அரசாங்க தொழிற்கல்விக் கொள்கையின்படி #NVQ LEVEL-5 ஆகத் தரப்படுத்தப்பட்டுள்ளது. இத்தரப்படுத்தலின்படி NVQ (National Vocational Qualification – தேசிய தொழிற்பயிற்சித் தகைமை) மட்டங்கள் 1 முதல் 7 வரை காணப்படுகின்றன. இதில் 3வது மட்டம் O/L க்கு சமமாகவும்; 4வது மட்டம் A/L க்கு சமமாகவும்; 5வது மட்டம் டிப்ளோமாவுக்கு சமமாகவும்; 6வது மட்டம் உயர் தேசிய டிப்ளோமா #HND வுக்கு சமமாகவும்; 7வது மட்டம் #பல்கலைக்கழக_மானியங்கள்_ஆணைக்குழு #UGC வால் அங்கீகரிக்கப்பட்ட இளமானிப் பட்டத்துக்கு #Degree சமமாகவும் கணிக்கப்படும்.

சாரதி, சிகையலங்காரம், தோட்டப் பராமரிப்பு, ஏ.சி, கணணி வரைகலை… உள்ளிட்டு 60க்கும் மேலதிகமாக பற்பல துறைகளிலும் ஏராளம் ஏராளமான தொழிற்பயிற்சி கற்கைகள் #VTA எனப்படும் தொழிற்பயிற்சி அதிகாரசபையூடாக மிகக் குறைவான செலவில் பெற்றுக் கொள்ள முடிகிறது. கல்விக்குப் பிந்திய பயிற்சிக் காலத்துக்கான இடங்களை அவர்களே பெற்றுத் தருவது கூடுதல் சிறப்பு. அத்தோடு அதனூடாகவே அரச/தனியார் துறைகளில் வேலை வாய்ப்புக்களைப் பெறுவதற்கான வசதிகளும் அங்கு உண்டு. கடந்த காலங்களில் ஓ.எல். கோட்டை விட்டவர்கள் கூட இவ்வாறான வழிகளூடாக இளமானித் தகுதியையும் கடந்து சாதித்த வரலாறுகள் நமது இலங்கையில் உண்டு.

ஸாரி.. பாய்ஸ்! தலைப்புக்கு வெளியால கொஞ்சம் போவது போல்படுகிறது… ஓ.கே. அப்புறம் Q.S., DraftMan, Accounts உள்ளிட்ட பல கற்கைகள் வேலைவாய்ப்புக்குத் தீனி போடாத நிலையில் பல வேலைவாய்ப்புகளில் அடிப்படைத் தகைமையாக இன்று NVQ LEVEL-5 மாறியிருக்கின்றது. நிச்சயம் இந்தக் கற்கை நெறி சோறு போடும் என்பதோடு தொழிற் சந்தைப் புள்ளி விபரங்களின்படி 2020ம் ஆண்டில் இலங்கை சந்தைக்கான #கணணித்_தொழில்நுட்பவியலாளர்கள்_200000 பேர் தேவைப்படுவர் என்பது தித்திக்கும் இனிப்பான செய்தியே..! இனி, உங்களுக்கு முன்னால் நிச்சயமான #ரெண்டு_லட்சம்_வேலைவாய்ப்புகள் இருக்க பயமேன்?

 

#எங்கு?

அடுத்து, நடக்கப் போகும் நேர்முகத் தேர்வுகள் இலங்கை முழுதும் நடைபெறும். அனைத்து நிலையங்கள் தொடர்புகொள்ளல் குறித்த தகவலின் இணைப்பு இதோ கிளிக்குக: http://www.vtasl.gov.lk/Training_Centers.php (VTA குறித்து: http://www.vtasl.gov.lk/vta/who_we_are.php) இருந்தும் யாம் இங்கு அறிவிப்பது மாத்தறை மாவட்டத்துக்கான நேர்முகத் தேர்வு வரும் 26, 27 திங்கள், செவ்வாயன்று நடைபெறும். நம் மாவட்டத்தில் இக்கற்கைநெறியை வழங்கும் ஒரே ஒரு நிலையம் மாத்தறை, கொட்டுவேகொடை, குணவர்தன மாவத்தையில் நான்கு மாடி இள மஞ்சள் பெயிண்ட் பண்ணப்பட்ட கட்டடத்தில் (டீன் பிரதர்ஸ் கட்டடத் தொகுதியிலிருந்து ஓரிரு கட்டடங்கள் பஸ் ஸ்டாண்ட் பக்கம், அல்லது K.F Tradings க்கு சற்றேறக் குறைய முன் புறமாக) இயங்கும் #IT_HUB ஆகும். மாத்தறை மாவட்டக் கற்கைகள் பொறுப்பாளர் மிஸஸ்_தீபிகா அவர்களை 0711212462 என்ற எண்ணை அழுத்தி தொடர்பு கொண்டு அனைத்து மேலதிக விபரங்களையும் கேட்டறியலாம். மாவட்டத்தில் தொழிற்கல்வி வளர்ச்சிக்கு கடுமையாகப் பாடுபட்டு உழைக்கும் கண்ணியத்துக்குரிய அந்தப் பொறுப்பாளர் 45 வயது தாண்டிய ஒரு தாய் என்பதைக் கவனத்திற் கொள்க. மாத்தறை மாவட்ட 12 நிலையங்களினதும் கற்கைப் பொறுப்பாளர் இவர்தான். நிலையங்கள் வெவ்வேறு துறைகளில் கற்கைகளை வழங்கும்.

 

#யாருக்கு?

எனது அனுபவத்தின் படி 22 வயதுக்குட்பட்ட எவரும் கற்கைக்குள் நுழைவது சௌகரிய அனுபவமாகும். அதனூடு அடுத்த கட்டமாக இலகுவாக தொழில் வாழ்வுக்குள் நுழையலாம். ( ஆனால் கற்கைக்குள் நுழைய வயதுக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை என்பதை நன்கு நினைவிற் கொள்க. மேலும் தொழில் ஒன்று செய்துவிட்டு அதை விட்டுவிட்டு முழுநேர கற்கையில் நுழைவது #சோத்துப்பாட்டுக்கு ஆப்பு வைக்கலாம் என்பது எனதனுபவம் 😉 அந்தத் தப்பை யாரும் செஞ்சுடாதீக! Just for Fun 😛 )

குறிப்பாக 2016 A/L செய்து விட்டு கம்பியூட்டர் உலகில் சஞ்சரிக்க விருப்பமுள்ளவர்கள், பெரியளவில் காசு செலுத்தி மெகா பட்ஜட் கோர்ஸ் செய்ய முடியாதிருப்பவர்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி ஒரு வருஷம் பல்லைக் கடித்துக் கொண்டு கடின உழைப்பைக் கொடுத்தால் சிறப்பான எதிர்காலத்துக்கான அஸ்திவாரம் ஒன்றை இடுவது உறுதி… இன்ஷா அல்லாஹ்.

இவர்களோடு நேற்றைய தினங்களில் Z-ஸ்கோர் கம்மியானதால் யுனிவர்சிட்டியைக் கோட்டை விட்டோர் வாழ்க்கையில் கோட்டை விட்டுவிடவில்லை என்ற தன்னம்பிக்கையுடன் இந்த ICT-5 கற்கைக்குள் பயமின்றி நுழையலாம். அரச/தனியார் தொழில் பெறலாம்; சுய தொழிலும் துவங்கலாம். கம்பியூட்டரோடு தொடர்ந்து உட்கார்ந்திருந்து வேலைபார்க்கும் வரம் உங்களுக்கு வாய்த்திடட்டும்.

நமது மாத்தறை மாவட்டச் சூழலில் (ஏன் இலங்கையிலேயே அப்படின்னுதான் நினைக்கிறன்) நமது முஸ்லிம் பெண்கள் இத்துறையில் ஈடுபாடு காட்டுவது குறைவு. பின்பு இதோடு தொடர்பான தொழில் வாய்ப்புகளிலும் அவர்கள் வசதியாகக் கருதக் கூடிய அமைப்பில் இல்லாமல் இருப்பதால் பெண்மணிகளை நான் அவ்வளவாக ஆர்வமூட்டவில்லை.

 

#ஆன்மீகம்?

ஆன்மீகம் பற்றி விஷேடமாக சொல்ல வேண்டுமா? ஆம்… இங்கெல்லாம் கற்கை நெறியைத் தொடர்வீர்களாயின் ஆன்மீகப் பக்கம் பலமான கவனிப்புத் தேவை. ஆண்-பெண் கலப்பை விட பல படி தாண்டி, அது அங்கு தூண்டப்படும் நிலையில் “நிச்சயமாக தொழுகையானது, மானக் கேடான வெறுக்கத் தக்கவைகளைத் தடுக்கக் கூடியது” என்ற ரீதியில் நமது சீரான தொழுகை நமக்கு மிக முக்கியமானது. அதன் பிரயோசனம் நமது ஒழுக்கத்திலே தான் வெளிப்படும். ஆண்-பெண் இரு பாலாருக்கும் தான் சொல்றேன்.

அதைவிட முக்கியமாக நாம் பின்பற்றுகின்ற இஸ்லாத்தை பெரும்பான்மை முஸ்லிமல்லாதோருக்கு மத்தியில் மிகச் சரியான முறையில் பிரதிநிதித்துவப்படுத்தி இஸ்லாமும் முஸ்லிம்களும் சினேகபூர்வம் மிகுந்தது என்பதோடு தூதை எத்திவைக்கலாம்; சிறந்த வாய்ப்பு, பொஸிட்டிவ்வாகப் பயன்படுத்துங்கள்; கரைந்து போய்விடாதீர்கள்!

 

இதைவிட அதிகம் பேசவும் அதிகம் அட்வைஸ் பண்ணவும் நான் விரும்பல்ல. மொத்தமா 20-30 பேர் மாத்தறை டிஸ்ட்ரிக்கிலிருந்து கற்கைநெறிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் ஒருவராவது இந்தப் போஸ்டைப் பார்ப்பதன் மூலம் தேர்வு செய்யப்படின்… #மகிழ்ச்சி

மேலுமுண்டான ஏதும் தகவல்கள் தேவைப்படின் மட்டும் என்னோடு பேஸ்புக், வாட்சப், வைபர், இமோ, ட்விட்டர் அல்லது மொபைல் என எவ்வூடகம் மூலமாவது பேசலாம்… இன்ஷா அல்லாஹ்.

வாழ்த்துக்கள் சகோதரர்களே..!

ஹ்ம்ம்.. தயாராகுங்கள். இன்டர்வியூக்கு இன்னும் இருப்பது மூன்றே நாட்கள். இந்தக் கற்கை, மற்றும் பல கற்கைகள் குறித்தும் இன்ஷா அல்லாஹ் பகிர்வேன். இணைந்திருப்போம்; உலகை வளப்படுத்துவோம்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அழுத்துங்கள் #ஷேர் பட்டனை…

அன்புடன் ஸியாப்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s