அபாயம் மிகுந்த ஆண்ரோய்ட் கேம்ஸ்கள்

17526771-no-computer-games-no-tv-warning-signs-vector

“ﻓَﺎِﺫَﺍ ﻓَﺮَﻏْﺖَ ﻓَﺎﻧْﺼَﺐْۙ ، ﻭَﺍِﻟٰﻰ ﺭَﺑِّﻚَ ﻓَﺎﺭْﻏَﺐْ”

இன்று குறிப்பாக நம் இளைஞர், யுவதிகளும் பொதுவாக உலகத்தில் வயது வந்த, வயதுவராத அனைவரும் சிக்கியிருக்கும் அபாயமே வீடியோ, இலக்ட்ரோனிக், ஆண்ரோய்ட் கேம்ஸ் வகைகளாகும்.

இந்த உம்மத்தின், உலகின் எந்த பாகத்தில் மூலை முடுக்கில் இருப்போரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரம் மனித மணித்தியாலங்கள் வீணடிக்கப்படுகிறது.

தம் பிள்ளைகள் பலர் அதற்கு அடிமைப்பட்டுள்ளதாக பெற்றோர் கவலைப்படுகின்றனர். பரீட்சையில் தோல்வி, வேலைகளில் கவனயீனம் என பல பாதகங்கள் இதன் விளைவாகத் தோன்றுகின்றன.

நம் முஸ்லிம் உம்மத்தின் முக்கியமாக தீர்வு கொடுக்க வேண்டிய பிரச்சினையாக இது மாறியுள்ளது. இலகுவில் புறக்கணிக்க முடியாத ஒரு பிரச்சினையாக உம்மத்தில் இது மாறியிருக்கின்றது.

முஸ்லிம், முஸ்லிமல்லாதார் அனைவரும் தீர்வு தேடிச் செல்ல வேண்டிய நிலை இங்கு பொதுவாகக் காணப்படுகின்றது. இது உலகம் பூராக தொற்று நோயாகப் பரவிவிட்டுள்ளது.

சில விடயங்கள் தன்னளவில் ஹராமானது. இன்னும் சில ஹராத்துக்கு இட்டுச் செல்வதால் ஹராமானது. எனவே இந்த விளையாட்டுக்களால் நீண்டகாலத்தில் ஏற்படும் பயங்கரங்களைக் கருத்திற் கொண்டு தீமை தடுக்கப்படும் விதத்தில் நாம் செயற்பட வேண்டும்.

 

இல்லாவிட்டால் சோம்பல் நிறைந்த, உழைக்கும் திறனற்ற, புத்தாக்கமற்ற ஒரு பரம்பரையை நாம் விரைவில் சந்திக்க வேண்டியிருக்கும். இஸ்லாம் ஓய்வு நேரத்தை எவ்வாறு கழிக்க வேண்டுமென அடிப்படையான வழிகாட்டலை வழங்கியுள்ளது:

ﻓَﺎِﺫَﺍ ﻓَﺮَﻏْﺖَ ﻓَﺎﻧْﺼَﺐْۙ

எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.

ﻭَﺍِﻟٰﻰ ﺭَﺑِّﻚَ ﻓَﺎﺭْﻏَﺐْ

மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக. (98:7-8)

 

ஓய்வு நேரத்தில் விளையாடச் சொல்லவில்லை. இறை நினைவும் அவனைச் சார்ந்திருப்பதுமே வேண்டப்படுகிறது. நாம் ஓய்விலும் விளையாடி இன்னும் களைப்படைந்து கொள்கிறோம்.

இந்த விளையாட்டுக்களுக்கு எவ்வித நோக்கமும் இல்லை. நோக்கம் ஏதுமற்ற ஒன்றின் பின்னால் முஸ்லிம் ஒருவன் மணிக் கணக்கில் உட்கார்ந்திருப்பானா? அல்லது பிரயோசனமான எதிலும் செயற்படுபவனா அவன்?

கிடைக்கும் ஓய்வான நேரங்களில் அழகிய காட்சிகள் மூலம் சுற்றுச் சூழலில் மனத்தை ஆற்றுப்படுத்த முடியாதா? இயற்கை சூழலை ரசிக்கவும், இறை அத்தாட்சிகளை அவதானித்துப் படிப்பினை பெறவும் தூண்டும் எத்தனை எத்தனை குர்ஆன் வசனங்கள் உள்ளன:

اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِىْ تَجْرِىْ فِى الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ مَّآءٍ فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيْهَا مِنْ کُلِّ دَآ بَّةٍ وَّتَصْرِيْفِ الرِّيٰحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَآءِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ‏

நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் – சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. (அல்பகரா:164)

இந்த கேம்ஸ் வகைகளால், இன்னொரு புறம் நேரத்தை வீணானவற்றில் மூழ்கடிப்பது ஹராமானதே… நாம் வீணாக நம் உடலுக்கும் மனத்துக்கும் பிரயோசனம் தராதவற்றில் நம்மை களைப்படையச் செய்கிறோம். நேரத்தை வீணடிக்க கூடாதென்பது தூதரவர்களது கட்டளையாகும். Computer games ஆல் பாதிப்புற்றோரின் தொகை எப்போதும் அதிகரித்துக் கொண்டே வருவதை புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

இவ்வாறான நிலைமைகள் அவனது நம்பிக்கைக் கோட்பாட்டில் ஏற்படுத்தும் பாதிப்புகள் எத்தகையது என்பதும் சிந்திக்கப்பட வேண்டியது.

தூதரின் கட்டளையை பாருங்கள்: “உங்கள் குழந்தைகளுக்கு நீச்சலையும் அம்பெறிதெலையும் குதிரையேற்றத்தையும் கற்றுக் கொடுங்கள்.” நம்மில் எத்தனை பேர் பிள்ளைகளுக்கு இத்தகைய வீரத்தை, தைரியத்தை ஊட்டும் அம்சங்களில் தூண்டுகிறோம்? வழிகாட்டுகிறோம்? இதனை கலீபா உமரும் மிகுந்து தூண்டியுள்ளார்கள். முஸ்லிம் எப்போதும் தனது திறன்களை வளர்ப்பவனாக, அறிவைப் பெருக்குபவனாக இருப்பான்.

 

முஸ்லிமானவன் பிரயோசமானவற்றில் ஈடுபடத்தான் இஸ்லாம் ஏவியுள்ளது. மேலுள்ள பயிற்சிகள் ஒவ்வொன்றும் மனிதனில் இயல்பாகத் தேவைப்படும் விஷயம். அவனது படைப்போடு ஒன்றியுள்ள அம்சம். அவை காலம் கடந்தவையல்ல. நமது பிள்ளைகள் இந்த தீய விளையாட்டுக்களால் ஈர்க்கப்பட மூளைச் சலவை செய்யப்படுகின்றனர். மலையேற்றம், நீச்சல் எல்லாம் Old fashion போல சிந்திக்க தலைப்பட்டிருக்கின்றனர்.

முஸ்லிம்கள் Busyஆக இருப்பதற்கு எவ்வளவு நல்ல விஷயங்கள் உள்ளன.!!! கல்வி, சமூக முன்னேற்றம் என்று அதிகமதிகம் உள்ளன. முஸ்லிம் என்பவன் இவ்வுலகின் பெறுமதி மிக்க சொத்தாக இருக்க வேண்டியவன். அவன் வெறும் காற்றில் அடிபட்டுப் போகும் சருகாக இருப்பதா?

இன்னும், வேலையொன்று இல்லாததாலேயே பிள்ளைகள் இவற்றில் தள்ளப்படுகின்றனர். நாம் நமது குழந்தைகளுக்கு குர்ஆனை மனனம் செய்ய, ஹதீஸ்களைப் படிக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்க முடியாதா? இன்று கூட்டாகவும், வீடுகளில் ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும். Electronic games ஆல் பாதிப்புற்றோரின் தொகை எப்போதும் அதிகரித்துக் கொண்டே வருவதை புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

இவ்வாறான நிலைமைகள் அவனது நம்பிக்கைக் கோட்பாட்டில் ஏற்படுத்தும் பாதிப்புகள் எத்தகையது என்பதும் சிந்திக்கப்பட வேண்டியது

இஸ்லாத்தில் மது ஏன் ஹராம் எனத் தெரியுமா? மதுவின் விளைவுகள் இதே கேம்ஸ்களினதும் விளைவாக உள்ளன. எவ்வகையில் பார்த்தாலும் மானிட இனத்துக்குப் பிரயோசனமற்றவைகள் மட்டுமே இவற்றில் உள்ளன.

நேரகால வீணடிப்பு, வீண் பணம் செலவளிப்பு, தொழில் வீணடிப்பு.. துஷ்பிரயோகம். இவை குறித்தெல்லாம் சிந்திக்க மாட்டீர்களா?

நமது இளைஞர்கள், யுவதிகள் தமது பொறுப்புகளை கையேற்க தயாராக வேண்டும். அதற்கென நம் இஸ்லாமிய இயக்கங்களும் நிறுவனங்களும் வழிகாட்டல்களைக் கொடுக்க வேண்டும்.

நமது பெறுமதி மிகுந்த வரலாற்றில் பிலாலும் அனஸும் உஸாமாவும் இப்னு அப்பாஸும்… மற்றும் வகைதொகையற்ற உதாரண புருஷர்கள் தம் இளம் வயதிலேயே இஸ்லாத்தின் தூதை சுமக்கும் பொறுப்பை ஏற்றவர்களாகக் காண்கிறோம்.

அத்தகையோர் இஸ்லாத்தைப் பாதுகாக்க உலகின் எந்தத் திக்குக்கும் பரந்து, விரைந்து சென்றனர். நாம் மாத்திரம் வீடியோ கேம்ஸ்களோடு அறைகளுக்குள் முடங்கிக் கிடப்பதா?

வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரான பாதையைக் காட்டி அருள்புரிய வேண்டும்! நமது சந்ததிகளை இம்மார்க்கத்தை பூமியில் தலைநிமிர்ந்து இருக்கச் செய்யும் சீரிய தலைமுறையாக உருவாக்க அருள் செய்யவேண்டும்!

ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!

Advertisements

One thought on “அபாயம் மிகுந்த ஆண்ரோய்ட் கேம்ஸ்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s