மக்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்பது பற்றிய அனுபவமொன்று

heart-and-brain

கடந்த சில நாட்களாக நமது காலத்திலே இஸ்லாமிய தஃவாவை முன்வைத்து, வெற்றிகரமாக அதனை செயல்வடிவமாக்கிக் காட்டிய ஒரு முன்னோடி ஆளுமை குறித்த மற்றும் அவர் தோற்றுவித்த இயக்கம்… அத்தோடு அவர்கள் இஸ்லாத்தை முன்வைத்த விதம் நமக்கு படிப்பினையாகவும், நமது தஃவாவுக்கான முன்மாதிரியாகவும் அமையும் நோக்கில் குறித்த சில வாசகப் பரப்புகளை இலக்காகக் கொண்டு சிறு அறிமுகக் குறிப்புக்களை தொகுத்து/எழுதி வந்தேன்.

இவ்வாறிருக்க, நேற்று குறித்தவொரு வாட்ஸப் குறூப்பில் அதன் தொடரொன்றைப் பகிர்ந்தேன். நமது நண்பர்கள் குழுவொன்றினது உபயோகத்தில் இருக்கும் அந்தக் குழுமம் முற்றாகக் களிப்பு நோக்கத்தில், கைவாறு நோக்கில் இயங்குகிறது. அதற்கென்றே அத்தளத்தில் சிலபோது நாளாந்தம் 2000ஐ தாண்டிய மெஸேஜ்கள் குவியும். அதில் எப்பிரச்சினையும் இல்லை. களிப்பு மனிதனுக்குத் தேவைதானே. ஆனால் அதன் வரையறையை அறிந்து, நேர விரயத்தையும் கருத்திற்கொண்டே நான் இயங்குவேன்.

சரி. குறித்த இஸ்லாமிய தஃவா முன்னோடி பற்றிய பதிவினை பகிர்ந்ததும் சில மெஸேஜஸ் விரண்டு வந்தன. ‘இங்க கொள்க பரப்ப வர வாணம்’ – ‘நாங்க 5 நேரம், தொழுத, ஓதுஅ, நோம்பு புடிக்கிய. எஙளுக்கு மார்க்கம் செல்லித்தர வரவாணம்’ என்றெல்லாம் விரண்டு நம்மைச் சுற்றின சில மெசேஜுகள். முக்கியமாக ‘சியாப்.. நீங்க இங்க இயக்கம் பத்தி எதுவும் பேச வாணாம். இஸ்லாத்த பத்தி மட்டும் பேசுங்க!’ ஆம். அதில் எந்தத் தப்பும் இல்லை. இஸ்லாம் பற்றி நாம் பேசுவது கட்டாயம். இயக்கம் என்பது இரண்டாம் பட்சமே. அப்படியெல்லாம் சொன்ன நம் சகோதரர்களின் எண்ணமும் இஸ்லாத்தின் மீதான தூய பற்றினாலேயே வெளிப்பட்டிருக்கும் என்பதும் நிச்சயம் என நம்புகிறேன்.

அதனோடு, இத்தகைய இஸ்லாத்தின் மீதான பற்றினது மறுபக்கத்தையும் நாம் சிந்திக்க வேண்டும்! இவ்வகையறா குழுக்களில் அதீத களிப்புக்காக குறை கூறிப் புறம் பேசல், ஆபாசம் நிரம்பிய போஸ்ட்கள், போட்டோக்கள் பகிரப்படல் போன்ற ஒவ்வொரு தீமையான நிகழ்வின் போதும் இவர்கள் வாய்மூடி இருப்பதன் உளவியல் என்ன? ஓர் இஸ்லாமிய ஆளுமையை அறிமுகம் செய்யும் போது மட்டுமே ஏற்படும் ஒவ்வாமைக்கான உளவியல் என்ன?

சகோதரர்களே! இஸ்லாத்தின் மீதான நமது தூய பற்று இஸ்லாம் குறித்த நமது அறியாமையின் அடிப்படையில் எழுந்தால், இஸ்லாத்துக்கு நாம் நன்மை செய்வதை விடவும் தீங்குதான் இழைப்போம்.

‘நாங்க 5 நேரம், தொழுத, ஓதுஅ, நோம்பு புடிக்கிய. எஙளுக்கு மார்க்கம் செல்லித்தர வரவாணம்’ என்றெல்லாம் நமக்கு ரிப்ளை வருகிறது எனின், இதுவே மார்க்கம் என நாம் செய்துவரின் ஏன் நம்மைச் சுற்றியுள்ள உலகம் இவ்வளவு சீர்கெட்டிருக்கிறது. நிச்சயம் நாம் சொல்லும் இஸ்லாம் மிக விசாலமானது. அதனை முன்வைக்கவே நாம் ஒவ்வொரு அணுகுமுறையாக பிரயோகிக்கிறோம். நிச்சயம் இஸ்லாம் என்ற அல்லாஹ் ஏற்ற ஒரே மார்க்கத்தை அகிலத்தார் அனைவருக்குமான உலகளாவிய வேலைத் திட்டமாக முன்வைக்கும் மட்டும் உழைப்போம்… இன்ஷா அல்லாஹ். ﻭﻣﺎ ﻋﻠﻴﻨﺎ ﺇﻻ ﺍﻟﺒﻼﻍ ﺍﻟﻤﺒﻴﻦ

இவ்விடத்தில், ‘நமது இஸ்லாத்துக்காக உழைத்த ஒருவரை பேசுவதில் என்ன தவறு?’ எனக் கேட்டு அவர்களுடன் வழக்குப் பேசுவதை விடவும் அந்த நண்பர்களுக்குரிய பதிலாக நாம் “புன்னகை” ஒன்றைக் கொடுப்பது மிகப் பெறுமதியானது. ஏனெனில் அழைப்பினை முன்வைக்கும் களத்தின் இயல்பை உணர்த்தப்பட்டவர்கள் நாம். இஸ்லாத்தினை அதற்குரிய பெறுமானத்தோடு முன்வைத்த தாஈக்கள்-அழைப்பாளர்களது பட்டியலில் என்னையும் இணைத்துவிட அல்லாஹ்வை நான் எப்போதும் இறைஞ்சுகிறேன்.

குறித்த சகோதரருக்கு இந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றலும் என் மீதான நட்பும் ஆழமாக இருக்கின்றது என்ற நம்பிக்கையுடன் ஒரு தஃவா நாட்குறிப்பாகப் பலரும் பயன்பெறும் முகமாகப் பகிர்ந்துள்ளேன்.

“அறிவுள்ள ஒருவன் அசத்தியத்தில் இருப்பது பற்றி நான் கவலையுறவில்லை ஏனெனில் அவன் ஒருநாள் சத்தியத்தைத் தேடி அதன் பக்கம் மீண்டுவிடுவான். ஆனால், அறிவற்ற ஒருவன் சத்தியத்தில் இருப்பது குறித்து நான் அஞ்சுகிறேன். ஏனெனில் அவன் காற்றில் அடிபட்டுச் செல்லும் சருகு போலாவான்” என்கிறார்கள் ஷெய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி அவர்கள். மக்களை அறிவூட்டி சத்தியத்தை அதன் உண்மைத் தோற்றத்தில் வழங்குவதற்கு எத்தனையாயிரம் செயற்றிட்டங்களோடு நமது உழைப்புக்களைக் கொடுக்க வேண்டியுள்ளது. அல்லாஹ்வே நமக்கு உதவவும் அருள்புரியவும் போதுமானவன்..!!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s