2017இல் இலங்கை முஸ்லிம்

muslims_in_srilanka

 

2016 முடிந்து 2017ம் துவங்கிவிட்டது. விரும்பியோ விரும்பாமலோ குழந்தைகளின் கல்வி முதல் வளர்ந்தோரின் தொழில்துறவுகள் வரைக்கும் புதிய பக்கங்கள் ஆரம்பிக்கப்படப் போகின்றன.

 

2016ஐ விடவும் 2017 மிக முக்கிய ஆண்டாக இலங்கை முஸ்லிம்களுக்கு இருக்கப் போவது உறுதி. தீர்மானகரம் மிக்க பல சவால்களை எதிர்கொண்டு எதிர் நீச்சலடித்து இந்த நாட்டுக்கு செய்ய வேண்டிய பங்களிப்போடு இம்மார்க்கத்தையும் வாழவைக்கும் பணியில் ஒவ்வொரு இலங்கை முஸ்லிமும் கவனம் செலுத்த வேண்டும்.

 

கல்வி, பொருளாதாரம், அரசியல், சட்டம், சுகாதாரம், சிந்தனை, சிவில் சமூக செயற்பாடுகள் என அனைத்திலும் இந்த சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினனும் தன்னை மேம்படுத்திக் கொள்ள முயற்சித்து சமூக மேம்பாட்டுக்கும் தேசத்துக்கான பங்களிப்புக்கும் தன்னை மேலும் தயார்படுத்த வேண்டும்.

 

கடந்த கால நிகழ்வுகளோடு இன்னும் பல நிகழ்வுகள் இலங்கை முஸ்லிமின் 2017 வருடத்தின் நாட்களை நிரப்பிவிடக் காத்திருக்கின்றன. அது தொடர்பான சிறிய பட்டியலொன்று:

👉 அரசியலமைப்பு மாற்றம் / திருத்தம்

👉 வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம்

👉 முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம்

👉 உள்ளூராட்சி எல்லை மீள் நிர்ணயம், தேர்தல் முறை மாற்றம்

👉 முஸ்லிம் பிரதேசக் காணிகளில் தொல்பொருள் இடங்கள் அடையாளமிடப்படல்

👉 இனவாத விஷப் பிரசாரம், வெறுப்புப் பேச்சுக்கள்

👉 பல புதிய இனவாத முகங்கள் அறிமுகப்படுத்தப்படல்

👉 ஜனாதிபதி, பிரதமரின் தேசியவாத, இனவாத போர்வையில் நாடகங்கள்

👉 அரசியல் லாபங்களுக்கான பலிக்கடாக்களாக சிறுபான்மையினர் பல மாதிரிகளில் ஆக்கப்படல்

 

இவற்றோடு,

📌 பாடசாலை, வைத்தியசாலை, பொது இடங்களில் இஸ்லாமிய அடையாளங்களுக்கான சவால்கள்

📌 பள்ளிவாசல்கள் மீதான அத்துமீறல்கள்

📌 எப்போதும் போல் பொதுச் சொத்துக்களைத் தின்று ஏப்பம் விட்டு வாழும் அதே மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்தும் பாராளுமன்ற சீட்டைச் சூடாக்குதல்

📌 வாழ்க்கைச் செலவு அதிகரிக்கச் செய்யப்படல்

📌 போதைவஸ்து, சமூகக் குற்றங்களின் தாக்கம்

இவ்வாறு இன்னோரன்ன விடயங்கள் 2017 இன் நாட்களை நிரப்பிடக் காத்திருக்கின்றன. அவற்றுள் சில எல்லா சமூகங்களுக்கும் பொதுவானவை. இன்னும் இணைப்பதற்கு ஏராளம் விடயங்களும் உள்ளன.

 

#என்ன_செய்யலாம்?

1- மார்க்க வழிகாட்டல்களிலிருந்து துவங்குவோம். இலங்கை முஸ்லிம்கள் பாக்கியசாலிகள் பல இயக்கங்கள், சிந்தனைகளது வழிகாட்டல்கள் பெரும் பொக்கிஷமாக கிடைத்துள்ளது. எனவே அடிப்படை வணக்க வழிபாடுகளுடன் தரீக்காக்கள், தப்லீக், ஜமாஅத்துஸ் ஸலாமா, ஜமாஅத்தே இஸ்லாமி, தவ்ஹீத் அமைப்புக்கள் அல்லது மஹல்லா ஜமாஅத் என ஏதாவதொரு அமைப்புக்கூடாக வாராந்தம் வழிகாட்டல்களைப் பெற்றுவர முயற்சிப்போம்.

2- தான் மட்டும் சரி என்ற வெறி நிலையிலிருந்து தூரமாகி சகோதரத்துவ வாஞ்சையை, அன்புணர்வை நமக்கு மத்தியில் அதிகரிப்போம்.

3- நம் குழந்தைகளின் கல்வி விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்துவோம். அதிலே ஒரு அடைவு மட்டத்தைத் திட்டமிடுவோம். ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு துறைகளில் திறமை கொண்டது என்பதை அறிந்து வழிகாட்டுவோம்.

4- உடலாரோக்கியத்தில் கவனம்; உணவுப்பழக்கத்தில் கரிசனை; உடற்பயிற்சி, தேவையான வைத்திய ஆலோசனைகளைக் கட்டாயமாகப் பெறுதல்.

5- கடந்த ஆண்டை விட அதிகம் வருமானம் பெறவும், ஸதகாக்கள் அதிகம் வழங்கவும் திட்டமிடல்.

6- கடந்த வருடத்தை விட மேலதிகமாக ஒரு திறமையை வளர்த்துக் கொள்ளல். அது ட்ரைவிங், கம்பியூட்டர் அறிவு எத்துறையாகவும் இருக்கலாம்.

7- அரசியல், சட்டங்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் குறித்த கூடுதல் தெளிவோடு இருப்போம். அதற்கென செய்திகள், துறை சார்ந்த நம்பத் தகுந்தவர்களோடு தொடர்பில் இருப்போம்.

8- இனவாதத்தினால் வெறுப்பூட்டல், முரண்பாடுகள் தோற்றுவிப்பு போன்றன ஏற்படுத்தப்படும் போது கூட்டுப் பொறுப்புடன் முழு இலங்கை சமூகத்துக்காகவும் நுணுக்கமாக செயற்படல்.

9- உங்களது உறவினர் வட்டத்துக்கிடையிலான தொடர்பை இன்னும் அதிகரிக்க, விசாலமாக்கத் திட்டமிடுங்கள்.

10- உங்களைச் சூழ அன்றாடம் காணும் முஸ்லிம் அல்லாத ஐவரையாவது தேர்ந்தெடுங்கள்; கொஞ்சம் புன்னகையை அதிகமாக்குங்கள்; இஸ்லாத்தின் Qualities ஐ அவருக்கு அறியச் செய்யுங்கள். உங்களுக்கோ உங்களைச் சார்ந்தோருக்கோ ஏதும் என்றால் அவர்கள் உங்களுக்காக வாதாடக் கூடியவாறு அவர்களை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

 

வாசித்த எல்லோருக்கும் Jazakallah khairan… இந்த சகோதரனின் சிறிய முயற்சி இது. குறைபாடுகள் இருக்கலாம். தேவையானோர் Update பண்ணி பலரையும் பயனடையச் செய்யுங்கள். வரும் நாட்கள் அனைவருக்கும் நன்மைகளையே கொண்டு வந்து சேர்க்க அதிகமதிகம் பிரார்த்திப்போம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s