பிலாலின் கோபம்

31147583-cute-caicasian-boy-open-mouth-nice-little-boy-eating-sweet-donut

பிலால் 12 வயதுடைய சிறுவன்; அவனிடம் பொம்மை வடிவிலான உண்டியல் ஒன்றிருந்தது. அதில் அவன் நாணயக் குற்றிகளை இட்டுச் சேமித்து வருவது வழக்கம். அவனது உம்மாவுக்கோ வாப்பாவுக்கோ நாணயக் குற்றிகள் தேவைப்படும் போது உடனே அவனது உண்டியலிலிருந்து தேவையான அளவு எடுத்துக் கொள்வார்கள்.

 

பின்னர் அவர்கள் எடுத்த தொகையினை ஒரு தாளிலே எழுதி உண்டியலினுள்ளே போட்டு வைத்து விடுவார்கள். மேலும் அவர்கள் மிக விரைவாகவே எடுத்த தொகையினை உண்டியலினுள் மீண்டும் போட்டுவிட மறக்கமாட்டார்கள்.

 

இவ்வாறிருக்கையில் ஒரு நாள் பிலாலுக்கு இனிப்புப் பண்டமொன்றை வாங்கிச் சுவைக்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. எனவே அவன் தனது உண்டியலைத் திறந்து பார்த்தான். உண்டியல் நாணயங்கள் ஏதுமின்றி வெறுமையாகக் கிடந்தது. அப்போது அவன் விரும்பிய இனிப்புப் பண்டத்தை வாங்க முடியாமல் போனதால் கோபமுற்றான்.

 

மறுநாள் வாப்பாவும் உரிய நாணயக் குற்றிகளை வைத்து விட்டார். ஆனாலும் சிறிது நேரத்தின் பின் அறைக் கதவு தட்டப்பட்டது. அங்கே உம்மா கணக்கு-வழக்கெழுதும் ஒரு துண்டுச் சீட்டைக் கண்டார்.

 

உடனே அவர் அதை எடுத்துக் கொண்டு உண்டியல் இருந்த இடத்துக்குச் சென்று அதனைத் திறந்து பார்த்தார். அங்கே நாணயக் குற்றிகளெதுவும் இருக்கவில்லை. மாறாக அங்கே ஒரு கடதாசித் துண்டு இருந்தது.
அதிலே எழுதப்பட்டிருந்தது: “அன்புள்ள உம்மாவுக்கும் வாப்பாவுக்கும்…! இனிமேல் நான் எனது நாணயக் குற்றிகளைக் குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்க எண்ணியிருக்கின்றேன். அங்கே சென்றுபாருங்கள்”

 

அங்கே தனக்கும் உம்மாவுக்கும் வாப்பாவுக்கும் என மூன்று இனிப்புப் பண்டங்களை வாங்கி வைத்திருந்தான் பிலால்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s