நொண்டி ஒட்டகம்

tied-up-camel

 

நொண்டியான ஒட்டகமொன்று ஓட்டப் போட்டி நிகழ்ச்சி ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டது. அந்த ஒட்டகத்துக்கும் தான் நொண்டியாக இருந்த போதும் போட்டியில் பங்குகொள்ள வேண்டுமெனத் தீர்மானித்தது.

அதற்கெனத் தனது பெயரைப் பதிவு செய்வதற்காகச் சென்றது. அங்கே போட்டி ஏற்பாட்டாளர்கள் இதனைப் பார்த்து ஆச்சரியமடைந்தார்கள். அதற்கு அவர்களைப் பார்த்து ஒட்டகம் “நீங்கள் ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள்? எனக்குப் பலமான உடல் இருக்கிறதே…!” எனக் கேட்டது. மேலும் “நான் இன்ஷா அல்லாஹ் போட்டியில் வெற்றி பெறுவேன்” எனவும் உறுதியாகக் கூறியது.

என்றாலும் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் போட்டியின் போது ஏதாவது இடையூறு ஏற்பட்டுவிடுமோ என அஞ்சிக்கொண்டே இருந்தனர். ஆனாலும் நொண்டி ஒட்டகம் திடவுறுதியோடு களத்துக்குள் நுழைந்தது. ஏனைய ஒட்டகங்களும் போட்டி ஆரம்பிக்கும் இடத்துக்கு வருகைதந்தன. அங்கே ஏனைய ஒட்டகங்கள் நொண்டி ஒட்டகத்தைக் கண்டதும் “ஏய்…! நொண்டி!!1 நொண்டி!!!” என ஏளனத்தோடு கத்தின; எள்ளி நகையாடின. நொண்டி ஒட்டகமோ இவை எதனையும் பொருட்படுத்தவில்லை. அது “நாம் போட்டியின் முடிவில் பார்ப்போம்… யார் பலசாலியென்று… யார் வேகமானவர் என்று…” என்றுவிட்டுத் தன்பாட்டில் இருந்தது.

போட்டியில் ஒட்டகங்கள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் வேகமாகப் பறந்தன. நொண்டி ஒட்டகம் இறுதி இடத்திலே மெது மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. எனினும் அது மனம் தளரவில்லை. அது தன் கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு பொறுமையோடு முன்னேறியது.

போட்டியின் இடையே மலையொன்றைக் கடந்து வெற்றியை அடையவேண்டியிருந்தது. அந்த மலை உயரமானதாகவும் கரடுமுரடானதாகவும் இருந்தது. ஏனைய ஒட்டகங்கள் வந்த வேகத்திலேயே மலையை ஏறிக் கடந்துவிட முயற்சித்தன. என்றாலும் அவை களைப்பின் காரணத்தால் சோர்ந்து போயிருந்தன. சில ஒட்டகங்கள் மயங்கி விழுந்தன. இன்னும் சில ஒட்டகங்கள் இடைநடுவில் நின்றுவிட்டன.

அப்போது நொண்டி ஒட்டகம் மிக மெதுவாக ஆனால் சக்தியுடன் அந்த இடத்தை அடைந்தது. அப்போது பெரும்பாலான ஒட்டகங்கள் மலையுச்சியை அடைய முடியாமல் திரும்பிக்கொண்டிருந்தன. உச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒட்டகங்கள் மிகச் சொற்பமாகவே இருந்தன. அவையும் களைப்பினால் இடைக்கிடை நின்று நின்று இளைப்பாறின.

ஆனால் நொண்டி ஒட்டகமோ மிக உறுதியோடு மலையுச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. அது களைப்பு எதனையும் உணரவுமில்லை. அது நொண்டியல்ல எனுமளவுக்குத் திறமையாகச் சென்றது.
இவ்வாறு நொண்டி ஒட்டகம் முன்னேறிச் செல்வதை இளைப்பாறிக் கொண்டிருந்த ஒட்டகங்கள் கவனிக்கவில்லை. மாறாக மலையுச்சியில் நொண்டி ஒட்டகம் வெற்றிக் கம்பத்தைத் தொடும் போதுதான் அவதானித்தன. அப்போது மற்ற ஒட்டகங்கள் வேகமாகச் சென்று வெற்றிபெற முயற்சித்தன. ஆனாலும் அவற்றால் முடியவில்லை. கடைசியில் போட்டியின் முதலிடத்தை நொண்டி ஒட்டகமே தட்டிக் கொண்டது. போட்டி ஏற்பாட்டாளர்கள் வெற்றிக் கிண்ணத்தை அந்த ஒட்டகத்துக்கு அளித்து அதனை கௌரவப்படுத்தினர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s