அப்துஸ் ஸத்தார் ஈதியை கௌரவித்த கூகுள்

image
கடந்த பெப்ருவரி 28 (செவ்வாய்க் கிழமை) அன்று உலகப் பிரசித்தி பெற்ற தேடுபொறியான கூகுள் ஒரு தனிநபரை கௌரவிக்கும் விதத்தில் தனது முகப்பை மாற்றியமைத்திருந்தது. அவர் பாகிஸ்தான் நாட்டில் ‘கருணையின் தூதுவர்’ என சிறப்புப் பெயரால் வர்ணிக்கப்படும் அப்துல் ஸத்தார் ஈதி ஆவார். அவருடைய 89வது பிறந்த தினத்தை கௌரவிக்கும் விதமாகவே கூகுள் தனது முகப்புப் பக்கத்தை மாற்றியமைத்திருந்தது.
பாகிஸ்தானில் பிறந்து அங்கேயே வாழும் அப்துஸ் ஸத்தார் ஈதி உலகிலேயே மிகப் பெரும் தன்னார்வத் தொண்டர் சேவையிலான அம்பியூலன்ஸ் வலையமைப்பை நிறுவியவராகக் கணிக்கப்படுகிறார். அது ‘ஈதி பவுண்டேஷன்’ என பாகிஸ்தானில் அழைக்கப்படுகிறது.
1928ம் ஆண்டு இந்திய பிரிவினைக்கு முந்தைய குஜராத்தின் பந்த்வா எனுமிடத்தில் பிறந்த ஈதி அவர்கள் தனது இருபது வயதுகள் தொட்டே பொதுச் சேவைகளில் அர்ப்பணித்துக் கொண்டார். படிப்படியாக வளர்ச்சிபெற்ற அவரது தன்னார்வத் தொண்டு அமைப்பு 2005ம் ஆண்டில் அமெரிக்க கத்ரீனா சூறாவளியின் போது $ 100,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிவாரணங்களை சேகரித்து வழங்கியிருந்தது. சுமார் 1,800 க்கும் மேல் அம்பியூலன்ஸ் வண்டிகளைக் கொண்டிருந்த அவரது சேவையணியானது 1997ம் ஆண்டில் உலகின் மிகப் பெரும் தன்னார்வத் தொண்டு அம்பியூலன்ஸ் சேவையாக கின்னஸில் பதியப்பட்டிருந்தது.
அவர் தனது உரைகளில் பயன்படுத்தும் வாசகங்கள் மனதை உத்வேகமூட்டுபவையாக உலகெங்கும் பயன்படுத்தப்படுகின்றன. “மக்கள் இன்னும் மனிதனாக வேண்டியிருக்கிறது”, “எனது அம்பியூலன்ஸ் உன்னை விடவும் நல்ல முஸ்லிம்”, “மனிதத் தன்மையை விட மதம் உயர்ந்ததல்ல” போன்றவை அவரது புகழ்பெற்ற வாசகங்களாகும். “வாழுங்கள்! வாழ்வதற்கு உதவுங்கள்!” என்ற வாசகத்தை சுலோகமாகக் கொண்டு ஈதி பவுண்டேஷன் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. மானுட நேயப் பணிகளில் சாதனை படைத்த அப்துஸ் ஸத்தார் ஈதி கடந்த ஆண்டு கராச்சியில் உள்ள ஒரு சாதாரண அரசாங்க வைத்தியசாலையில் மரணமுற்றார். திடீரென சுகஈனமுற்று வெளிநாட்டு சிகிச்சைகளுக்கான வாய்ப்புக்கள் இருந்த போதும் இவர் அதனை மறுத்து சாதாரண அரசாங்க வைத்தியசாலையையே தேர்ந்தெடுத்தார்.
அவருக்கு சமாதாத்துக்கான நோபல் பரிசுக்கு பல முறை சிபாரிசு செய்யப்பட்டிருந்தும் அது கிடைக்கப்பெறவில்லை. மலாலாவுக்கு அப்பரிசு கொடுக்கப்பட்ட போது மலாலாவை விடவும் இவரே அதற்குத் தகுதியானவர் என குரல்கள் எழுப்பப்பட்டன. அதற்கென 2014 இல் #NobelPrizeForEdhi என ஹெஷ்டேக் கள் உருவாக்கப்பட்டும் குரலெழுப்பபட்டது. அதற்கவர் “நோபல் பரிசு இம்மக்களுக்கு சேவை செய்வதனைப் போல் வேறு எதனையும் தந்துவிடாது.” எனக் கூறிவிட்டார்.
இவர் நினைவாக பாகிஸ்தான் அரசு நாணயக் குற்றியொன்றை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s