துருக்கியர்களுக்குப் பெண் கொடுப்பதில் போட்டி போடும் அரபுக்கள்:

32017417523318

கடந்த வருடங்களில் துருக்கிய ஆண்களுக்குத் தமது பெண் மக்களைத் திருமணம் செய்துகொடுக்கும் அரபுக்களின் தொகை சடுதியாக அதிகரித்து வருவதை புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதில் குறிப்பாக 2015 இல் 3,569 சிரியப் பெண்கள் துருக்கிய ஆண்களைத் திருமணம் செய்திருந்ததோடு, இவ்வெண்ணிக்கை 2016ம் ஆண்டில் 6,495 ஆக அதிகரித்திருந்தது.

ஒப்பீட்டளவில் துருக்கியப் பெண்களை மணக்கும் அரபு ஆண்களை விடவும் துருக்கிய ஆண்களுக்குத் தமது பெண் மக்களைக் கொடுக்கும் அரபுப் பெற்றோரே அதிகமாகும் என அப்புள்ளிவிபரம் கூறுகின்றது.

2016 இல் துருக்கிய ஆண்கள் வேற்று நாட்டுப் பெண்களை மணமுடிப்பது 20% ஆல் அதிகரித்திருந்தது; இதன் எண்ணிக்கை 22,583 ஆகும். அத்தோடு 3,777 துருக்கியப் பெண்கள் வேற்று நாட்டு ஆண்களைத் திருமணம் செய்துள்ளதோடு இது 5.9% அதிகரிப்பாகும். துருக்கியர்களின் வேற்று நாட்டு மணப் பெண்களில் 29% ஆனவர்கள் சிரியப் பெண்மணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியர்களுக்கு அடுத்தபடியாக ஜேர்மனி, அஸர்பய்ஜான், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டவர்கள் துருக்கிய ஆண்களைத் திருமணம் செய்துள்ளனர். துருக்கியப் பெண்களைத் திருமணம் செய்துள்ளவர்களில் 35.4 சதவீதத்துடன் ஜெர்மனியர் முன்னிலை வகிப்பதுடன், அதற்கடுத்தபடியாக சிரியர், அவுஸ்திரேலியர், பிரித்தானியர் மற்றும் அஸர்பய்ஜானியர் உள்ளமையை குறித்த புள்ளிவிபரம் தெளிவுபடுத்துகின்றது.

துருக்கியை பலர் விரும்புவதற்கு முஸ்லிம் உலகில் அது உறுதியான தலைமைத்துவத்துடனும் அரசியல், பொருளாதா, இராணுவ, தொழில்நுட்ப முன்னேற்றங்களில் மிகுந்த வினைத்திறனோடு முன்சென்று கொண்டிருக்கும் நாடாக உள்ளமை குறிப்பிடத்தக்க காரணியாகும்.

தமிழில்: Siaaf

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s