‘இந்தியா’ பற்றி கஷ்மீரி சிறுவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

327370618

‘கஷ்மீர்’ இந்திய வல்லாதிக்க எண்ணங்களுக்கு மிக அதிகளவில் பலிகொடுக்கப்படும் பிராந்தியம். நான் நினைக்கிறேன் பலஸ்தீனத்துக்கு அடுத்தபடியாக அரச வன்முறை அதிபயங்கரமாகக் கட்டவிழ்த்து விடப்படும் பிரதேசம் அது. ‘சதுர கிலோமீட்டர்களுக்கு’ இத்தனை இராணுவத்தினர் என்பதற்குப் பதிலாக ‘சதுர அடிக்கு’ இத்தனை இராணுவம் என முற்று முழுதாக துப்பாக்கி முனையில் ஆளப்படும் தேசம்.

பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என பாரபட்சமின்றி அனைத்துத் தரப்பினர்கள் மீதும் வன்முறைகள் சர்வசாதாரணமாக நிகழ்த்தப்படுகிறது உலகின் அந்த அழகிய தேசத்தில்.

மின்சாரம் இல்லை; இணைய வசதி இல்லை; பத்திரிகைகள் இல்லை; பாடசாலைகள் இல்லை; இருவர் ஒன்றுகூடிப் பேசமுடியாது. அந்தளவு ஒடுக்குமுறை நிலவுகிறது.

‘ஊரடங்குச் சட்டம்’ அங்கு தேச வழமை. பெற்றோர் தம் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே அனுப்ப விரும்புவதே இல்லை. கஷ்மீரின் குழந்தைகள் ‘துப்பாக்கி வேட்டு’ ஒலிகள் கேட்டே வளர்பவர்கள். ஆர்ப்பாட்ட கோஷங்கள் அவர்களுக்கு சாதாரணம் அங்கே.

இந்நிலை நிலவுகையில் கஷ்மீர் சிறுவர்கள் சிலரிடம் ScoopWhoop என்ற இணையதளம் ‘இந்தியா’ குறித்து அவர்கள் என்ன கூறுகிறார்கள் அவர்களிடம் கேட்டே பதிவுசெய்திருக்கிறார்கள்.

13 வயதுடைய சபான் நிஸார் சொல்கிறான்:

“இந்தியா என்பது சிறுவர்களை அடிக்கின்ற பொலிஸ். எனது பெற்றோர் என்னை வீட்டுக்கு வெளியே செல்லவிடுவதில்லை. எமக்கு அதற்குப் பயம். ‘உன்னைக் கொன்றுபோடுவார்கள்’ என்று எனது பெற்றோர் சொல்கிறார்கள். எனக்கு விளையாட முடியாது. நான் கடந்த பத்து வருடமாக எந்த விளையாட்டும் விளையாடவில்லை. எமக்குப் பயம். எமக்கு சுதந்திரம் வேண்டும். நான் வெளியே சென்று போராட வேண்டும். ஆனால், எனது பெற்றோர் என்னை அறைக்குள் போட்டுப் பூட்டி வைத்திருக்கிறார்கள். எனக்கு அதன் கோஷங்கள் மாத்திரமே இங்கு கேட்கின்றது.”

ஏனைய சிறுவர்களது வாக்கு மூலங்களை அவ்வாறே ஆங்கிலத்தில் தருகிறோம்.

Muawin Tasneem, 12 years

“India is tyrant. India kills people and disappears them. I want free Kashmir. I don’t want to be with India or with Pakistan. I am afraid to go out. Policemen can do anything to me. I can’t trust them. They can kill me. I rarely study. And I can’t play outside. Who should I play with? The Indian army men on the street?”

Rida Shafi, 9 years

“I have seen my parents expressing hate against India since my childhood. And that’s why I get angry. I, too, hate India”

Mohsin Wani, 13 years

“I was always confused why my parent supported Pakistan during cricket played between India and Pakistan. I never asked them. But as I grew up, my playmates and my class fellows informed me about the Indian oppression in Kashmir and of late, day by day, I understand this fact more and more.”

Danish, 12 years

“India is a cunning country. They oppress us. If it would have been our own country they wouldn’t have killed so many people. We don’t like to be with India.”

Mehreen, 14 years

“India is killing girls in Kashmir. I saw the images on TV. I do not go out; I fear the pellets may hit me too. They blind everyone. I don’t like India. I don’t want to stay with India. They are killing everyone here. India is instilling fear in everyone. We don’t feel safe anymore.”

கஷ்மீர் மட்டுமல்ல இந்தியா எங்குமே சிறுவர்கள், பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. ஆனால், கஷ்மீர் மிக அபாயமான கட்டத்தில் இருக்கின்றது. சிறுவர்கள் அங்கு திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றனர். இந்தியா ஒருபோதும் இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர மாட்டாது. அரசியல்வாதிகளுக்கு அரசியல் நடாத்தவும் ஏதும் வேண்டுமல்லவா? காங்கிரஸ் பி.ஜே.பி. மீதும், பி.ஜே.பி. காங்கிரஸ் மீதும் பழிபோட்டே காலங்கடத்துவார்கள். இருவரும் சேர்ந்து பாகிஸ்தானுக்கு விரல்நீட்டுவர்.

இந்தப் பழிபோடல் விளையாட்டில் பரிதாபம் கஷ்மீரிகள். இந்தியா சிறுவர்களை இழக்கிறது; சிறுவர்கள் தம் குழந்தைப் பருவத்தை இழக்கிறார்கள். இந்தியா கண் முன்னே சிதைகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s