பிரேஸில் தேசத்தில் முஸ்லிம்கள்

tumblr_nvmt1pgf1A1tokksoo1_540

தலை நகரம்: பிரேஸிலியா

முக்கிய நகரங்கள்: ரியோ டி ஜெனிரோ, ஸாவோ பவுலோ

மொழி: போர்த்துக்கேய மொழி

நாணயம்: பிரேஸில் ரியல்

ஆட்சி முறைமை: யாப்புக்குட்பட்ட சமஷ்டிக் குடியரசு ஜனாதிபதி முறைமை

ஜனாதிபதி: டில்மா ரூஸஃப்

பரப்பளவு: 85,15,767 சதுர கி.மி.

சனத்தொகை: 202,656,788

 

தென்னமெரிக்கக் கண்டத்தில் மிகப் பெரிய நாடு பிரேஸில்தான். கிழக்கே அத்திலாந்திக் கடலின் நீண்ட கரையோரத்தையும் மேற்கு மற்றும் வடக்கிலே ஆர்ஜெண்டினா, உருகுவே, பராகுவே, பெரு, கொலம்பியா, கயானா என நீண்ட நில எல்லையைக் கொண்டது.

 

நம்மத்தியில் உதைப்பந்து விளையாட்டு மூலமாகவே வெகு பிரல்யமடைந்திருக்கும் பிரேஸில் தேசம் புவியியல் ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பெற்றிருக்கும் முக்கியத்துவம் வரையறுத்துக் கூற முடியாதது. பண்டைய செழுமை மிகு இன்கா நாகரிகம் பிரேஸில் தேசத்தையும் உள்ளடக்கியே இருந்தது. எனினும் போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பின் பின்னரே வெளி உலகத்தோடு தொடர்புகள் ஏற்பட்டன.

 

பிரேஸில் தேசத்திலே முஸ்லிம்களின் வரலாறு குறுகிய கால அளவைக் கொண்டது என வரையறை செய்துவிட முடியாது. ஏனெனில் அங்கு போர்த்துக்கேயர் ஆக்கிரமிக்கத் தொடங்கியதுமே 1550 களில் ஆபிரிக்காவிலிருந்த கறுப்பு முஸ்லிம்களை பிரேஸிலுக்கு அடிமைகளாகக் கடத்திக் கொண்டு வந்தார்கள். இதனோடு முஸ்லிம்களின் வருகை அங்கு தொடங்கி விடுகிறது. ஆனாலும் அவர்களுக்கு தமது மார்க்கத்தைப் பேணி வாழ்வதற்கு போர்த்துக்கேயர்கள் இடம்வைத்துவிடவில்லை.

 

அடிமைகள் பெரியளவில் நாடு பெயர்த்தப்பட்ட பின் 20ம் நூற்றாண்டு வரைக்கும் சொல்லிக்கொள்ளும்படியான எந்தப் பாரிய முஸ்லிம் குடிப்பெயர்வும் இடம்பெறவில்லை. அவ்வகையில் அண்மைக்காலங்களில் தான் சிரியா மற்றும் லெபனான் நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் அங்கு பரவலாகக் குடியேறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

 

ஆபிரிக்க முஸ்லிம் வழித்தோன்றல்கள்:

போர்த்துக்கேயரின் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட ஆபிரிக்க அடிமைகள் மொத்த பிரேஸிலின் சனத்தொகையில் 37% என்ற போதும் அவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்களாக இல்லை என்பது கவலை தரும் செய்தி. அவ்வாறே அடிமைகளின் வாரிசுகளில் சுமார் 3 மில்லியன் பேர் தம் சொந்த நாடுகளுக்கே திருப்ப அனுப்பப்பட்டதாகவும் பிரேஸில் வரலாறு கூறுகின்றது.

 

19ம் நூற்றாண்டுகளின் இரண்டாம் காற்பகுதிகளில் ஆபிரிக்கர்களிடையே ஒரு புத்தெழுச்சி ஏற்பட்டு பலர் தம் சொந்த மதமான இஸ்லாமை நோக்கி திரும்பத் தொடங்கினர். இதனால் அன்றைய கத்தோலிக்கர்களுக்கும் ஆபிரிக்கர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரம் பல ஆபிரிக்கர்களின் உயிரைக் காவுகொண்டது. அன்று நடந்த ஆபிரிக்கர் எழுச்சி தான் முழு வட/தென் அமெரிக்கக் கண்டங்களிலும்  ஏற்பட்ட பாரிய அடிமைகள் எழுச்சியாக இன்றுவரை நினைவுகூரப்படுகிறது. எனினும் அவர்கள் இஸ்லாம் நோக்கித் திரும்புவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1910 ஆகும் போது ஆபிரிக்கர்களில் 100,000 பேர் முஸ்லிம்களாக இருந்ததாக வரலாறு சொல்கிறது.

 

புதிய குடிப்பெயர்வுகள்:

ஆபிரிக்க பிரேஸிலியர்களின் புத்தெழுச்சிக்குப் பிற்பாடு கணிசமான மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய முஸ்லிம்களின் குடிப்பெயர்வு பிரேஸில் நோக்கி இடம்பெற்றது. ஆயினும் மத்திய கிழக்கு சார்ந்தவர்களில் கணிசமான அரபுக் கிறிஸ்தவர்களும் சிறிய தொகை ஷீஆக்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களின் மொத்த சனத்தொகை 35,207 பேர் எனக் கணக்கெடுப்புக்கள் கூறுகின்றன. இவர்களுள் பெரும்பான்மையானவர்கள் ஸாவோ-பவுலோ பகுதியிலேயே வசிக்கின்றனர். இப்பகுதிகளிலே அதிகமான அரேபிய உணவகங்கள், கடைகள் போன்ற வியாபார மையங்களையும் காணலாம். எனினும் இந்த வியாபாரங்களில் பெரும் பங்கு வகிப்பது அரபுக் கிறிஸ்தவர்கள்தான்.

 

முக்கியமாக எடுத்துக் கூறப்படவேண்டிய விடயம் என்னவென்றால் பிரேஸிலியர் மத்தியில் இப்போது இஸ்லாம் தொடர்பான தேடல் அதிகரித்து வருவதனை அங்கிருந்து வரும் தகவல்கள் எமக்குத் தெரிவிக்கின்றன. இதற்கு அண்மைய உதைப்பந்தாட்ட உலகக் கிண்ணாப் போட்டிகளின் போது மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமை அறிமுகப்படுத்தும் பாரியளவான தஃவா பணி குறிப்பிடத்தக்க சான்றாகும். அவ்வகையில் இஸ்லாமைப் புதிதாகத் தழுவிய 10,000 பேர் பிரேஸிலில் இருப்பதாகக் கணக்கெடுப்புக்கள் கூறுகின்றன.

 

இஸ்லாமின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக அங்கு தற்போது அதிகளவில் மஸ்ஜித்கள் மாத்திரமன்றி இஸ்லாமிய நூலகங்கள், சஞ்சிகைகள், இஸ்லாமியக் கலை-கலாசார மையங்கள், பாடசாலைகள் என்பனவும் நிறுவப்பட்டு வருகின்றன. புனித அல்குர்ஆனும் போர்த்துக்கேய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பிரேஸிலில் கட்டப்பட்ட முதலாவது பள்ளிவாசல் ஸாவோ-பவுலோவில் 1952ல் கட்டப்பட்டதெனக் கூறப்படுகிறது. பிரேஸிலிய முஸ்லிம் அமைப்புக்களின் ஒன்றியம் தரும் தகவல்களின்படி அங்கு தற்போது 115 பள்ளிவாசல்கள் உள்ளன. இவ்வமைப்புத் தான் முஸ்லிகளை ஒன்றிணைக்கும் பணியைச் செய்துவருகின்றது. பிரேஸில் பள்ளிவாயல்களில் ஒழுங்குமறையாகப் பட்டம் பெற்ற 15 இமாம்கள் மாத்திரமே இருக்கின்றனர். இவர்களுள் 7 பேர் மாத்திரம்தான் பிரேஸிலில் பிறந்தவர்கள். அவ்வகையில் பிரேஸில் இஸ்லாமின் தூதை முழு நாட்டிற்கும் எடுத்துச் செல்ல இன்னும் வெகு தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது.

 

பல்வேறுபட்ட இனப் பிரிவுகளிலிருந்தும்; ஆபிரிக்க வழித்தோன்றல்கள், மத்திய கிழக்கு குடிப்பெயர்வாளர்கள், புதிதாக இஸ்லாமைத் தழுவியோர் என மொத்த பிரேஸிலிய முஸ்லிம்கள் 700,000 முதல் 1,500,000 வரை இருக்கலாமென முஸ்லிம் அமைப்புக்களின் ஒன்றியம் மற்றும் பிரேஸிலிய வாமி நிறுவனத் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

 

பிரேஸிலில் முஸ்லிமாக வாழ்தல்

பிரேஸில் இடதுசாரி அரசியல் சித்தாந்தத்திற்குப் பிரபல்யமான நாடு. பொதுவில் இடதுசாரிகள் மானிட சுபீட்சத்தையும், விழுமியங்களையும், சுபீட்சத்தையும் பெரிதும் மதிப்பவர்கள். எனவே அதன் முழுப் பயனையும் பிரேஸில் வாழ் முஸ்லிம்கள் அனுபவிக்கின்றனர்; அவர்கள் இஸ்லாமை சுதந்திரமாகப் பின்பற்ருகின்றனர் எனத் துணிந்து கூறலாம்.

 

  • இதுவரைக்கும் முஸ்லிம்களின் விஷேட தினங்கள் அரசாங்கத்தால் விடுமுறையாகப் பிரகடனப்படுத்தப்படவில்லை. ஆனால் சுய விடுமுறை பெறலாம்.
  • இஸ்லாமை எங்கும் பிரசாரம் செய்யவும் வழிபாடுகளை மேற்கொள்ளவும் தடையேதுமில்லை.
  • இஸ்லாமைப் பிரதிபலிக்கும் ஆடைகளைத் தாராளமாக அணியலாம்.
  • ஹலால் உணவைப் பெற முழு அனுமதி உண்டு. பிரேஸில் உலகின் முன்னணி ஹலால் உணவு உற்பத்தியாளர் என்பது கூடுதல் தகவல்.
  • முஸ்லிம் சிறார்கள் எங்கும் தமது கல்வியைப் பெற எல்லா உரிமைகளும் அங்கு வழங்கப்பட்டுள்ளன.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s