எழுதுகிறேன்

1901307_498905730232402_1435674043458236808_n

ஆம்… நான் இங்கு இடையறாது எழுத முயன்று கொண்டிருக்கிறேன். என்னைப் படைத்த இறைவனுக்கே அதற்கான புகழ் அனைத்தும்… எல்லோரும் ஏதோ ஒரு மாற்றத்திற்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதில் எழுத்துக்களின் பங்கு பிரதானமானது. அந்த மாற்றத்தின் ஜீவ நாடியாக எனது இறைவன் முதல் வேத கட்டளையாக வாசிப்பதற்கு ஏவினான்.

யோசிக்கும் எல்லோராலும் எழுதலாம்… ஆனால் வாசிப்போரால் மட்டுமே நல்லதை, பயனுள்ளதை எழுத முடியும். அப்படியொருவனாக இருக்க ஆசைப்படுகிறேன்.

இருபதில் உலகை மாற்ற நினைப்பவன் ஐம்பதாகியும் ஒன்றையுமே மாற்றாது போகிறான். இருபதில் தன்னை மாற்ற நினைப்பவன் ஐம்பதில் உலகையே மாற்றிவிடுகிறான். அவ்வகையில் என் எழுத்துக்கள் அனைத்துமே எனக்கானவையே… அதன் பிறகாக என் வாழ்க்கைப் பயணத்தில் சக பயணிகளாக உங்களுக்கும் பயனிருப்பின் என் எழுத்துக்களிலிருந்து சுவைப்பதற்காய் இங்கு பதிவிடுகிறேன்.

நான்… அன்புடன் எம்.எஸ்.எம். ஸியாப்… இலங்கையின் தென்கோடிக் கரையோர மீன்பிடிப் பட்டணம் வெலிகாமம் எனதூர். இலங்கையின் ஆதி அரபுக் குடியேற்றங்களுள் முக்கியமானது எனதூர். எனதூருக்குப் அடுத்த ஊர் அண்டார்டிக்கா என சுவாரஷ்யமாய்க் கூறுவேன். அதுதான் உண்மையுங்கூட… அண்டார்டிக்கா வரை பரந்து விரிந்த கடல் எங்களுக்குச் சொந்தம்.

ஆரம்ப, இடைநிலை கல்விகளை 11 வருடங்கள் ஊரில் அறபா தேசிய பாடசாலையில் கற்றேன். உயர்கல்வி பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவில் ஷரீஆத் துறைப் பட்டத்துடன், பேராதனை வெளிவாரிப் பட்டதாரி மாணவனும்கூட…

உங்கள் பிரார்த்தனைகளில்… எப்போதும் இணைத்துக் கொள்ளுங்கள் இந்த சகோதரனை… அன்புடன், ஸியாப்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s