வெண்ணிறக் காலணி

நான் மருத்துவமனையில் நோயாளிகளை பார்த்துக்கொண்டிருந்த போது ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதன் தாய் அதனை அமைதிப்படுத்த முயற்சித்துக் கொண்டு பரிசோதனைக்காக நுழைந்துகொண்டிருந்தார்.


அவனை பரிசோதித்துவிட்டு மருந்துச் சீட்டையும் எழுதிக் கொடுத்துவிட்டேன். அக்குழந்தை நோயினால் அழவில்லை. அதற்கு வேறொரு காரணம் இருந்தது. அதனை அந்தத் தாயிடம் கேட்டபோது, “ஒன்றுமில்லை டாக்டர்! பிள்ளைகள் இப்படித்தான். உங்களுக்கு தெரிந்த விஷயம்தானே.” என்றுவிட்டாள். அவளது நெஞ்சிலிருந்த பெருந்தன்மை உண்மையை சொல்வதை விட்டும் அவளை தடுத்திருக்கும் என நான் உணர்ந்தேன்.


ஓர் அப்பிளை எனது கையால் எடுத்து அவளின் பக்கம் நீட்டினேன். அந்தக் குழந்தை என்னைப் பார்த்து “எனக்கு வெள்ளைக் காலணிதான் வேண்டும்” என உரத்துக் கத்தியது. தாய் வெட்கித்து அவ்விடத்தை விட்டும் அகல முற்பட்டாள்.


அவளைப் பார்த்து புன்னகைத்து “உம்மு மாஜித் என்னை உங்களது சகோதரனாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மகன் மாஜித் எனது பிள்ளை போல இருக்கிறார்” என்றேன். அதற்கவர், “இல்லை டாக்டர்! பிள்ளைகள் கண்டதற்கெல்லாம் ஆசைப்படுவார்கள். அவற்றின் பெறுமதியும் சிறியது” என்றார்.


“உம்மு மாஜித்! அப்படிப் பேசவேண்டாம்” என்று நான் சொல்லிவிட்டு எனது மருத்துவிச்சி பாத்திமாவை அழைத்து சொன்னேன். “பாத்திமா! இன்று உங்கள் அன்றாட வேலைகள் முடிந்தபின் இந்தப் பிள்ளை மாஜிதை அழைத்துக் கொண்டு காலணிக் கடைக்கு செல்லுங்கள். அவர் விரும்பும் காலணியை வாங்கிக் கொடுங்கள்.”


நான் கொடுத்த வாக்குறுதியின் பின் பிள்ளை அமைதியானது. அப்போது அந்தத் தாய் எனக்கு நன்றி கூற முயற்சித்தாள். என்றாலும் நான் அவசரமாக பேச்சை திசைதிருப்ப முயற்சிசெய்து மாஜிதின் தந்தையைப் பற்றியும் அவரது நிலையையும் விசாரித்தேன். கடைசியாக அவள் எனது வைத்திய சந்திப்பில் நிறைவான உள்ளத்தோடும் எனக்காக பிரார்த்தித்துக் கொண்டும் விடைபெற்றார்.


உம்மு மாஜிதின் குடும்பம் வறுமையில் வாழ்கின்றது. அவர்களால் அடிப்படைத் தேவைகளையும் பெற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றனர். மாஜித் அருகிலிருக்கும் பல்பொருள் அங்காடியில் கண்ட காலணியை நினைத்துக் கொண்டிருக்கிறான். 


ஒருநாள் தூக்கத்திலும் கூட அவன் “பூட்ஸ்… உம்மா புது பூட்ஸ். இன்னைக்கு பெருநாள் வாப்பா” என கத்தியிருக்கிறான். அவனது தாய்க்கு துக்கம் பொத்துக்கொண்டு வந்திருக்கிறது. கனவில் அவனது மெல்லிய உதடுகளிடையே கேட்கும் சொற்களால் அழுதிருக்கிறாள். 


மாஜிதின் தந்தை செய்வதறியாது கைவிரித்துவிட்டார். தாய் வருகின்ற பெருநாளைக்கு காலணியொன்றை வாங்கிக் கொடுக்க வேண்டுமென எண்ணியிருந்தாள். அவள் தனது எண்ணத்துக்கு நாணயமானவளாக இருந்தாள். இருந்தாலும் கொஞ்சம் பணம் சேர்ந்தவுடனே புதிய நாட்கள் அவற்றை விழுங்கிக்கொள்ளும். சிறுவனின் பெருநாள் தள்ளிச்செல்வதே இறுதியில் எஞ்சியிருக்கும்.


மாலையானதும் எனது மருத்துவிச்சி மண்ணும் பலகையும் கலந்து செய்யப்பட்ட அவளது வீட்டைத் தேடிச் சென்றாள். காலையில் அழுதுகொண்டு சென்ற தாயிடம் மாஜிதை கூட்டிப் போவதற்காக அனுமதிகோரினாள். 


அப்போது அங்கே இருந்த அந்த வீட்டுக்குப் பெரியவள் “எவ்வளவு பெரிய சங்கடம் ஐயோ! எம்மோடு உங்களையும் நாம் கஷ்டப்படுத்துகிறோம். அல்லாஹ் உங்களது டாக்டரை பொருந்திக்கொள்வானாக! மகள்! உங்களையும் அல்லாஹ் பாதுகாத்து நல்ல பிள்ளைகளைத் தரவேண்டும்.” என பிரார்த்தித்தாள்.


பாத்திமாவும் மாஜிதும் அந்த பல்பொருள் அங்காடிக்குப் போனார்கள். நுழைகின்ற வழியில் அங்கே குறித்த இடத்தில் சிறுவன் விரும்பிய வெண்ணிறக் காலணியைக் காணாதபோது திடுக்கிட்டான். அங்கே மூலையிலிருந்த காலணியின் பக்கம் அவனது பார்வை துள்ளிச்சென்றது. 


அதே காலணியை அங்கே வந்திருந்த ஒரு வாடிக்கையாளர் அணிந்துபார்த்து விட்டு வைத்திருந்தார். அவன் ஆசையுடன் அதனைத் தூக்கினான். நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். அதனை அணிந்துகொண்டான். உடனே பறப்பது போல நடக்கத் தொடங்கினான். அவனது நோயையும் வலிகளையும் மறந்துவிட்டான். காற்றைக் கிழித்துக்கொண்டு ஓடப்பார்த்தான். பாதையில் வரும் வாகனங்களில் மோதிவிடுவானோ என்று அஞ்சி, மருத்துவிச்சி அவனை எட்டிப் பிடித்திருக்காவிட்டால் ஓடியிருப்பான்.


குழந்தைளின் இதயங்களில் காலணிக்கு எந்தளவு இடமுண்டு என்பதை ஏலவே நான் அறிந்ததிருந்தேன். எனது குழந்தைகள் என்னுடைய காலணிகளையும் தம் தாயாரின் காலணிகளையும் எப்படியெல்லாமம் அணிவார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். அவற்றை அணிந்து பார்த்துக்கொண்டு நடந்துசெல்வதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அவை வர்ணனைகள் மௌனித்துப் போகும் குழந்தைப் பருவ கற்பனைகள்.


கதவருகில் காலணிகள் வைத்திருந்த சிறிய தட்டு எனது கடைக்குட்டிப் பெண்ணுக்கு விருப்பத்துக்குரிய விளையாடுமிடமாக இருந்தது. நான் மருத்துவம் பார்க்கும் இடத்தின் சுவரொன்றிலே மாட்டப்பட்டிருக்கும் படத்திலும் ஒரு குழந்தை தனது தாயின் காலணியை அணிந்துகொண்டிருக்கிறது.


அந்தப் படத்தில் அந்த சிறுமி காலணிகள் தெரியும் வண்ணம் ஆடையை சற்று தூக்கிக் கொண்டிருப்பாள். அதன் போதான அவளது சந்தோஷம் அங்கே உயிரோட்டத்தோடு இருக்கும். இருந்தாலும் நான் காலணி ஒன்று அனைத்தையும் புறம் தள்ளிவிடும் கனவாக மாறும் என்பதை சத்தியமாக அறிந்திருக்கவில்லை.


மாஜித் தன் குடும்பத்தார் இருக்கும் வீட்டை அடைந்தான். அங்கே அவனுக்கு பைத்தியம் பிடித்தது போலாகிவிட்டது. புல்புல் பறவை போன்று மிதந்து மிதந்து நடனமாடத் தொடங்கினான். அவ்வப்போது அதைக் கழற்றியெடுத்துத் துடைத்துக் கொண்டான். சுத்தம் செய்தான். பின்பு எடுத்துக் கொண்டு போய் ஆடைகளை அடுக்கி வைக்கும் அந்த கவனிப்பாரற்ற பலகைத் தட்டின் உயரத்தில் அதை வைத்தான்.


அவனுடைய வெண்ணிற இளவரசனை அருகே இருக்கும் பூட்டு இல்லாத அலமாரியில் வைப்பதற்காக வேண்டி அதை திறந்தான். அங்கு வைத்துப் பார்த்துப் பார்த்து இனிமை கொள்வது அவன் எண்ணம்.


பின்னர் தெருவிலிருக்கும் சிறுவர்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக வாசல் கதவருகே அதனைக் கொண்டுபோய் வைத்து பூரிப்படைந்தான்.


கட்டிலில் வந்து உட்கார்ந்துகொள்ள அங்கிருந்து உடனே அகன்றுவிட்டான். அவனுடைய உற்சாகம் குன்றியிருந்தது. தன் மெலிந்த கால்களை காலணியை நோக்கி நீட்டிக் கொண்டான். காலணிகள் அதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. அவ்வாறே அந்த பின்னிரவில் இன்னொரு மணிநேரம் கழிந்து சென்றது. அவனுக்கு அது ஒரு பெருநாள் தினமாக இருந்தது. பாலர் பருவத்தினர் எல்லாருக்கும் அது பெருநாள்தான்.


உண்மையாக அவன் களைப்படையும் வரையில் தூங்கச் செல்லவில்லை. இருப்பினும் தூங்குவதற்காக தலையணையில் தலை வைத்து போர்த்திக் கொள்ளவுமில்லை, உடனே எழுந்து கதவருகில் சென்றான். 


அந்தக் கும்மிருட்டில் தெரிகின்ற வரைக்கும் காலணியைத் தேடினான். காணாமல் போகுமென்ற பயத்தில் அதை எடுத்துவந்து வீட்டு மூலையொன்றில் வைத்தான். அந்த இடம் தனக்கு பாதுகாப்பாக தெரியுமாறு தேர்ந்தெடுத்தான். 


பின்பு வந்து படுத்துக் கொண்டான். இரண்டாவது முறை மீண்டும் எழும்பினான். தன் இதயத்துக்கு நெருக்கமான காலணியைத் தொட்டுப் பார்த்தான். தான் விளையாடிய பத்திரிகையின் தாள்களால் போர்த்தினான். ஜன்னலுக்குள்ளால் துர்நாற்றம் வீசியது. 


மீண்டும் தூங்க வந்தான். மீளவும் எழும்பினான். காலணியை எடுத்துக்கொண்டு வந்தான். கட்டிலுக்கடியில் வைத்துக்கொண்டான். கட்டிலின் கால் மாட்டில் தூங்கினான். கண்களை அடிக்கொருதரம் திருப்திப்படுத்துவதற்காக கட்டிலுக்கு வெளியே தலையை அசைத்து அசைத்துப் பார்த்தான். 


தாய்க்கு இதனைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை. தந்தையும் எக்காளச் சிரிப்போடு கலந்துகொண்டார். “டாக்டர்! அல்லாஹ் அவனது அளப்பரிய அருட்கொடையை உங்கள் மீது பொழிவான்” என கூறினார். 


சிறுவன் மீண்டும் காலணியை எடுத்து தலையணைக்குக் கீழே வைத்துக் கொண்டான். சரியாக இருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ள எழுந்து எழுந்து நின்றான். பின்னர் தூக்கம் ஆட்கொண்டு கண்ணயர்ந்தான். அதுவும் சில நொடிகளே நீடித்தது. மீளவும் எழுந்து வெண்ணிற காலணிகளை அணிந்துகொண்டான். தன் மெலிந்த உடலை ஒருக்களித்துக் கொண்டான். தான் காலில் அணிந்திருக்கும் காலணியைத் தொட்டுக்கொண்டான். அப்போதுதான் அவனுக்கு சரியாகத் தூக்கம் போயிருந்தது.



அறபு மொழியில்:
அப்துல் முத்தலிப் அஹ்மத்
தமிழில்:
ஸியாப் முஹம்மத்
வெலிகாமம், இலங்கை.

மூலக் கதை ஆசிரியர் அப்துல் முத்தலிப் அஹ்மத் சிரியா நாட்டவர். 1965இல் ஹமா நகரில் பிறந்து அங்கே வசிக்கிறார். சிறுவர் நோய்களுக்கான சிறப்பு மருத்துவ நிபுணர். சிறுவர் மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். மருத்துவம் உட்பட அறிவியல், இலக்கியம், சமூகவியல் ஆய்வு மாநாடுகளில் அறபுலகிலும் ஐரோப்பாவிலும் பங்கேற்ற அனுபவம் மிக்கவர்.

– மகாஸிதுஷ் ஷரீஆ மற்றும் இறை நியதிகளது ஒழுங்கின் வழி – பலஸ்தீனர்களின் மாபெரும் மீளத்திரும்பும் நடைப்பயணம்

images (7)

 

அரபு மூலம்: உஸ்தாத் வஸ்பி ஆஷூர் அபூ ஸைத்

-பேராசிரியர், மகாஸிதுஷ் ஷரீஆ இஸ்லாமிய்யா-

தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப் (நளீமி)

 

 

பலஸ்தீனத்தின் உள்ளேயிருக்கும் மக்கள் வெளியே இருக்கும் தமது பலஸ்தீன மற்றும் பலஸ்தீனரல்லாத முஸ்லிம் சகோதரர்களின் உறுதியான ஆதரவுடன் பலஸ்தீன ஆதரவுச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு திடசங்கற்பம் எடுத்திருக்கின்றனர்.

 

பலஸ்தீனர்கள் தாயக தினம் (யவ்முல் அர்ழ்) என்று நினைவுகூரும் ஆர்ப்பாட்டங்கள் மார்ச் 30 (2018) இல் ஆரம்பித்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டங்கள் நக்பா நினைவு நாளான மே மாதம் 15ம் திகதியன்று முடிவுக்கு வரும். பெரும் மக்கள் திரளில் அது பற்றி அறிவிக்கப்பட்டுத் துவங்கியது. அதற்கு அவர்கள் “மாபெரும் மீளத்திரும்புதல்” எனப் பெயரிட்டார்கள். அது பலஸ்தீனத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அகதிகளுக்கு தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கான உரிமையைக் குறிக்கின்றது. இதுவொரு விஷேடமான செயற்பாடாகும்.

 

இது குறித்த செயலுக்கான பதிலாக இல்லாத போதும், அது பலஸ்தீனர்களுக்காக மாற்றுத் தேசமொன்றை உருவாக்கும் துரோகத் திட்டத்தோடு தொடர்பானது. மட்டுமல்லாது அவ்வாறு மீளத் திரும்புவதுதான் களத்தின் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் சுக்கான் ஆகும். அதுவே சமகால நிகழ்வுகளில் தாக்கம் நிகழ்த்தி இலக்கை சாத்தியமாக்கிவிடக் கூடிய பக்கத்திற்கு அவர்களை மாற்றிவிடும்.

 

 

இந்த மாபெரும் மீளத்திரும்பும் நடைப்பயணத்தின் இலக்குகள்:

 

உலக ஒழுங்கு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சியோனிஸத்தின் தலைநகராக குத்ஸ் புனித நகரைப் பிரகடனம் செய்யும் தீர்மானம் என்பவற்றுக்கு எதிரான பலஸ்தீன வெகுமக்களின் எதிர்ப்பாக இந்த நடைப்பயணம் உருவெடுத்தது. பலஸ்தீனர்கள் விவரிப்பவாறு சர்வதேச சதியினடியாக விரைந்து பலஸ்தீன விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான தொடந்தேர்ச்சியான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நடைமுறை ரீதியான முதலாவது எட்டாக இந்த மீளத்திரும்பும் நடைப்பயணம் உள்ளது.

 

காஸாவின் பல்வேறு பிராந்தியங்களிலும் இருந்து எல்லைப் பகுதிகளை நோக்கி மேற்கொள்ளப்படும் நடைப்பயணம் தாயக தினம் (யவ்முல் அர்ழ்) அன்று துவங்கும் என உடன்பாடு காணப்பட்டிருக்கின்றது. அப்பயணம் எல்லைகளை ஊடுருவிச் செல்ல முயற்சிக்கும். இந்த வெகுமக்கள் செயற்பாடு எவ்வாறு எந்த இயல்போடு அமைந்து காணப்படும் என்ற கட்டமைப்புக்கள் முழுமைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

 

அங்கே எல்லை நெடுகிலும் அகதிகளுக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சியோனிஸப் படைகளுடனான முறுகல்கள் சமாதானபூர்வமான வழிமுறைகள் மூலமாகத் தீர்க்கப்படும். எல்லையைத் தாண்டிச் செல்லுதல் என்பதே ஆர்ப்பாட்டம் செய்வோரின் முதலாவது இலக்காகும். மற்றது சர்வதேச சட்டத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தக் கோருவதாகும். அதில் தலையாயது ஐ.நா. வின் பொதுச் சபை வெளியிட்ட 194 ம் இலக்கத் தீர்மானமாகும்.

 

அந்தத் தீர்மானத்தின் 11வது பந்தி பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “இந்தப் பொதுச் சபை, தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிவிடும் விருப்பமுள்ள அகதிகள் கூடியளவு சீக்கிரமான காலகதியில் மீளத்திரும்புவது அத்தியாவசியமானது என தீர்மானம் செய்கின்றது. அவர்கள் தமது அண்டை அயலாருடன் சமாதானப் பூர்வமாக வாழலாம். தமது சொந்த இடங்களுக்குத் திரும்பத் தடையான இழந்து போயிருக்கும் சொத்துக்களுக்கான நஷ்டஈடுகள் அளிக்கப்பட வேண்டும். அவ்வாறே சொத்துக்களுக்குத் தீங்கு ஏற்படுத்தியிருக்கும் அனைத்து இழப்புக்கள், நஷ்டங்கள் அனைத்தும் சர்வதேச சட்டங்கள், நீதியின் அடிப்படையில் இழப்பதற்கு முன்பு இருந்தவாறே வழங்கப்பட வேண்டும். அவ்வகையில் அனைத்து இழப்புக்கள், நஷ்டங்கள், தீங்குகளும் ஆட்சியாளர்கள் அல்லது அதிகாரத்திலுள்ளவர்கள் புறமிருந்து ஈடுசெய்யப்பட வேண்டும்.

 

 

ஷரீஆவின் உயர் பொது இலக்குகளுடன் (மகாஸிதுல் ஆம்மா லிஷ்ஷரீஆ) இம்மாபெரும் மீளத்திரும்பல் நெருங்கிய தொடர்புடையது:

 

நீதியை நிலைநாட்டுதல், உரியவர்களுக்கு உரிமையைப் பெற்றுக்கொடுத்தல், நிலத்தையும் பூமியையும் பாதுகாத்தல், செல்வத்தையும் சொத்துக்களையும் பாதுகாத்தல் என்ற வகைகளில் இஸ்லாமிய ஷரீஆவின் பொது உயர் இலக்குகளுடன் இவ்விடயம் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது. உரிமைகளைப் பெற்றுக் கொள்வதிலும், அதனை உரியவர்களுக்கு அளிப்பதிலும் உறுதியோடு செயலாற்றுவது நீதியை நிலைநாட்டி பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதில் வந்துள்ள இஸ்லாமிய ஷரீஆ மற்றும் அதன் உயர் இலக்குகளில் உள்ள மகத்துவம் மிக்க விடயங்களாகும். ஒத்துழைப்பு, சகோதரத்துவத்தின் கட்டாயக் கடமையை மேன்மைப்படுத்துவது, நீதியை நிலைநாட்டுவது என்பன அனைத்து இறைத் தூதுகளினதும் இலக்காக இருந்துள்ளது.

“நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியை நிலைநாட்டுவதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) தராசையும் இறக்கினோம்” (அல்ஹதீத்:25)

 

இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த செல்வம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்தல் என்ற கண்ணியம்மிகு ஷரீஆ பாதுகாக்க ஏவியவற்றோடு உடன்படுகிறது. மட்டுமன்றி அதற்கென மரணிப்பதையும் ஆகுமாக்கியுள்ளது. அவ்வாறு மரணிப்பதை இறைபாதையில் வீரமரணத்தைத் தழுவுவதாகக் கருதுகிறது. “எவர் தனது செல்வத்தைப் பாதுகாக்கப் போராடி மரணிக்கிறாரோ அவர் ஷஹீதாவார்; எவர் தனது மார்க்கத்தைப் பாதுகாக்கப் போராடி மரணிக்கிறாரோ அவர் ஷஹீதாவார்; எவர் தனது உயிரைப் பாதுகாக்கப் போராடி மரணிக்கிறாரோ அவர் ஷஹீதாவார்; எவர் தனது குடும்பத்தைப் பாதுகாக்கப் போராடி மரணிக்கிறாரோ அவர் ஷஹீதாவார்” (திர்மிதி, அபூதாவூத்)

 

முஸ்லிம்கள் இந்நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்களாக இருந்தால் அது சகோதரத்துவத்தின் உயிரோட்டத்தைப் பேணியதில், முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வுகளை மகத்துவப்படுத்தியதில் உட்படும். இவையெல்லாமே இஸ்லாத்தின் பெரும் உயர் இலக்குகளாகும். “நிச்சயமாக விசுவாசிகள் அனைவரும் சகோதரர்களே!” (அல்ஹுஜுராத் :10)

 

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரனாவான். அவன் மற்றவனுக்கு அநியாயம் இழைக்கவும் மாட்டான். அநியாயம் இழைப்பவனுக்கு உதவவும் மாட்டான்.” (புகாரி, முஸ்லிம்)

 

ஒரு முஸ்லிம் மீது தனக்கு உள்ளவாறே தனது சகோதர முஸ்லிமுக்கு உள்ள உரிமைகளைப் பேசுகிறது. இமாம் இப்னு ஹஸ்ம் கூறுகிறார். “ஒரு முஸ்லிமை எவர் உணவளிக்கவும் ஆடையணிவிக்கவும் சக்தியிருந்தும் பசியோடும் நிர்வாணத்தோடும் விட்டுவிடுகிறவர் அவருக்கு அநியாயம் இழைத்துவிட்டார்.”

 

பட்டினிக்கும் உடுத்த ஆடையின்மைக்கும் இவ்வாறு எனின், தாய்மண்ணை சீர்குலைத்திருக்கும், பயிர்களையும் அடுத்த தலைமுறையையும் அழித்துப் போட்டிருக்கும், பூமியையும் மானத்தையும் சிதைத்துவிட்டிருக்கும் கொடிய எதிரியை எப்படி விட்டுவைத்திருப்பது?

 

எனவே இந்தச் செயற்பாடு மனித இயல்புடன், அறிவுடன், தர்க்க நியாயத்துடன் நெருங்கிவருகிறது. மானிட உணர்வுக்குக் கீழ்ப்படிபவற்றுடன் இசைந்து செல்கிறது. காலத்தின் எல்லாப் புறத்திலும் மானுடம் அதற்கு ஒத்துச்செல்கிறது. உரிமையுடையவர்கள் அதற்கு மிகவும் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள். கோரிக்கைகள் இருக்கையில் உரிமை ஒரு போதும் மரணித்துப் போய்விடாது.

 

 

மகாஸிதுல் ஜிஹாதை (ஜிஹாதின் உயர் இலக்குகளை) மேன்மைப்படுத்தும் செயல்:

 

அல்லாஹுத் தஆலா அவனது பாதையில் போராடுவதை விதியாக்கியுள்ளான். இஸ்லாத்தின் ஆரம்பம் தொட்டு மறுமை வரைக்கும் அதனைத் தெளிவான கடமையாக ஆக்கி வைத்துள்ளான். அதன் மூலம் முஸ்லிம்களது மேன்மை, கண்ணியத்தை அவன் உத்தரவாதம் செய்கிறான். “நீங்கள் மறைமுகமாக வட்டியை ஆகுமாக்கிக் கொண்டு வேளாண்மைக் கால்நடைகளைப் பற்றிக்கொண்டு பயிர்ச்செய்கைகளில் மூழ்கிக் கொண்டும் இருந்து ஜிஹாதையும் விட்டுவிட்டால் அல்லாஹ் உங்கள் மீது இழிவைச் சாட்டிவிடுவான். நீங்கள் உங்களது மார்க்கத்தின் பக்கம் மீளும் வரைக்கும் உங்களை விட்டும் அதனை அகலச் செய்யமாட்டான்” என நபியவர்கள் நவின்றுள்ளார்கள். (அபூதாவூத்)

 

ஜிஹாதுடைய மகாஸிதுகளில் எதிரிகளைத் தடுத்து நிறுத்தல், நிலத்தை விடுவித்தல், மானத்தைப் பாதுகாத்தல், குழப்பத்தையும் சீர்குலைவையும் தடுத்தல் எல்லாம் உள்ளடங்கும்.

“ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் – அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.” (அல்பகறா: 193)

 

இங்கு இமாம் இப்னு தைமியா அவர்களது நிலைப்பாடு எதிரி மார்க்கத்தையும் உலகையும் சீர்குலைக்கிறான் என்பதற்காக அவனை எதிர்க்க வேண்டுமென்பது ஈமானுக்குப் பின்பு அத்தியாவசியக் கடமையாகும். “தற்பாதுகாத்துக் கொள்ளப் போராடுவது என்பது புனிதமானவை, மார்க்கம் ஆகியவற்றைத் தாக்கியழிக்கும் எதிரியைத் தடுப்பது என்பது கடினம் மிகுந்த வழிமுறையொன்றாகும். அது வாஜிப் என்பது இஜ்மாவான கருத்தாகும். மார்க்கத்தையும் உலகையும் சீர்குலைத்துத் தாக்கியழிக்கும் எதிரியை எதிர்ப்பது, ஈமானுக்குப் பின்பு அத்தியாவசியக் கடமை இதுவன்றி வேறு இல்லை. அதற்கு வேறு எந்த நிபந்தனையொன்றும் இருக்கத் தேவையில்லை. மாறாக எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு எதிர்த்து நிற்க வேண்டும். (அல்ஃபதாவா அல்குப்ரா: 5/538)

 

 

எதிரியை எதிர்த்து நிற்காமல் ஜிஹாதின் மகாஸித் நிலைநிறுத்தப்பட மாட்டாது. எனவேதான் ஷரீஆ சட்டம் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்த்து நிற்பதைக் கடமையாக்கியிருக்கின்றது. ஒரு சாராருக்குப் போதியளவுக்கு நிலைநிறுத்தப்பட்டு விட்டால், அவர்கள் தமது அண்டை அயலைச் சார்ந்தவர்களைப் பாதுகாப்பது கடமையாகும். “எதிரிகள் இஸ்லாமிய நாட்க்குள் புகுந்துவிட்டால் அயலில் இருப்போர் அவர்களைப் பாதுகாப்பது கடமை என்பதில் சந்தேகமில்லை.  இஸ்லாமிய நாடுகள் எல்லாம் ஒரே நிலையில் இருந்தால் தந்தையுடைய, கடன் கொடுத்தவருடைய அனுமதியின்றியே விரைந்து சென்று இணைவது கடமையாகும்.” என இமாம் இப்னு தைமியா அவர்கள் கூறுகிறார்.  (அல்ஃபதாவா அல்குப்ரா: 5/539)

 

இந்த உம்மத்தினர் அனைவருமே இம்மாபெரும் மீளத் திரும்பும் நடைப்பயண நிகழ்வில் கரிசனை காட்டவேண்டும். பதாகைகளை உயர்த்தி நிற்கவேண்டும். ஏனெனில் சியோனிஸ்டுகள் தான் இந்த உம்மத்தினருக்கு மிக அபாயகரமானவர்கள். இந்த ஆக்கிரமிப்புப் புற்றுநோய் அகற்றப்பட்டுவிட்டால் இந்த உம்மத்தினரைப் பீடித்திருக்கும் பலப்பல நோய்கள் குணப்படுத்தப்பட்டுவிடும். அதிகமான கோளாறுகளை விட்டும் தூய்மை பெற்றுக்கொள்ளும். அதன் மூலம் நாம் நமது உதிரங்களையும் புனிதங்களையும் எண்ணற்ற உயிர்களையும் காத்துக்கொள்ளலாம்.

 

இதனால் தான் இமாம் இப்னு குதாமா அவர்கள் “ஒவ்வொரு சமூகமும் தமக்கு அயலிலிருக்கும் எதிரியுடன் போர்புரிவர். இதன் அடிப்படை ஒரு குர்ஆன் வசனமாகும்.

“நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திரு(ந்து தொல்லை விளைவி)க்கும் காஃபிர்களுடன் போர் புரியுங்கள்” (அத்தவ்பா: 123) ஏனெனில் அருகிலிருப்போர் தான் அதிகம் தீங்கு விளைவிக்கக் கூடியோர். போரில் பின்னர் எதிர்கொள்ள வேண்டியோருக்கு முன்பே அவர்களை எதிர்கொள்ளும் தீங்கைத் தடுத்துக் கொள்ளல் வேண்டும். ஏனெனில் அவர்கள் முஸ்லிம்கள் விடயத்தில் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடும். ஆரம்பத்தில் அவர்களுக்குக் கிடைக்காது போயிருந்த வாய்ப்புக்கள் பின்பு அவர்களுக்குக் கிடைக்க முடியும்” என்கிறார். (அல்முஃங்னி: 9/202)

 

இந்த சியோனிஸப் புற்றுநோய் இஸ்லாமிய உம்மத்தைப் பீடித்திருப்பது மிகப் பெரும் தீங்கு என்பது உறுதியான விடயமாகும்.

 

 

தெய்வீக நியதிகளோடு ஒத்துச் செல்லும் செயல்:

 

இச்செயற்பாடு தெய்வீக நியதிகளோடு ஒத்துச் செல்கிறது. அல்லாஹ் இப்பிரபஞ்சத்தையும் அதில் வாழ்தலையும் சில நியதிகள், உறுதியான தொடர்ந்தேர்ச்சியான விதிகள் மூலமும் ஆக்கிவைத்திருக்கிறான். அது மாறாது; மாற்றப்படாது; மாறிவிடவும் மாட்டாது.

“அப்படியாயின் அல்லாஹ்வின் நியதியில் (அதாவது, பாவம் செய்தோர் தண்டனை பெறுதலில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்; அல்லாஹ்வின் (அவ்)வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்.” (ஃபாத்திர்: 43)

 

சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையேயான போராட்டமும் இந்த நியதிகளுக்குள் அடங்குவதுதான். அவ்வாறு இல்லாதுவிட்டால் தான் பூமியில் குழப்பம் மலிந்து வாழ்க்கை தேங்கிவிடும்.

“(இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.” (அல்பகறா: 251)

 

 

 

இவ்வகை நியதி இல்லாது விட்டால் வேறு விதமான அனர்த்தங்களும் நேர்ந்திருக்கும்.

“மனிதர்களில் சிலரை சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.” (அல்ஹஜ்: 40)

 

இந்த வசனத்தை விளக்கும் ஷெய்க் ஸஃதி அவர்கள் கூறுகிறார். “மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின், நிராகரிப்போர் முஸ்லிம்களை ஆக்கிரமித்துவிட்டிருப்பர். அவர்களது வணக்கத்தலங்களை பாழ்படுத்தியிருப்பர். அவர்களது மார்க்கத்தை விட்டும் புரளச்செய்திருப்பர். இது, தன்னைத் தவிர மற்றவர் தாக்கப்பட்டு, வேதனைப்படுவதை விட்டும் பாதுகாக்கப்படுவதற்கான ஜிஹாத் ஷரீஅத் ரீதியானது என்பதைக் காட்டுகின்றது. (தப்ஸீருஸ் ஸஅதி: 539)

 

இது இன்னொரு இறை நியதியின் பாற்பட்ட நியதியொன்றாகும். அது தான் மாறி மாறி நிகழும் சுழற்சி நியதி. அல்லாஹ் கூறுகிறான்.

“இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்; இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.

(ஆல இம்ரான்: 140)

 

தடுத்துப் போராடுவதன் மூலமன்றி மாறும் சுழற்சி விதி நிகழ மாட்டாது. அரசுகள் மாற மாட்டாது. சட்டங்கள் மாற மாட்டாது. நிலைகள் மாற மாட்டாது. தடுத்துப் போராடுவதன் மூலம்தான் எதிரி இல்லாது போவான். தீங்குகளும் சீர்கேடுகளும் குழப்பங்களும் தடுக்கப்படும்.

 

மாறி மாறிச் சுழலும் நியதியின் இன்னொரு விளைவுதான் மேற்குறித்த அல்குர்ஆனியத் திரு வசனம் சொன்னவாறு “ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.” என்பதாகும். இதன் மூலம் தெய்வீக நியதிகள் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்திருப்பவை என்பது விளங்குகின்றது.

 

இறுதியாக, கடந்த மார்ச் 30 வெள்ளியுடன் துவங்கிய இம்மாபெரும் மீளத்திரும்பும் நடைப்பயணம் 2018 மே மாதம் நிறைவுக்கு வர இருக்கின்றது. நிச்சயமாக அதுவொரு அருள் பொருந்திய வேலைத் திட்டம். ஷரீஅத் ரீதியான ஒரு செயற்பாடு என்பதற்கு அப்பால் அதுவொரு வாஜிப். அதற்கு ஒத்துழைப்புக் கொடுத்து அதற்கென அழைப்புக் கொடுப்பது உரிமை என்பதையும் தாண்டி ஒரு ஃபர்ழ் ஆகும். அது ஒரு தனித்துவமான செயற்பாடு. வரப் போகும் நாட்கள் பெரும் நிகழ்வுகளுக்கும் மிகப் பெரும் வெற்றிகளுக்குமான அடையாளங்கள் துலங்கும் என நான் நம்புகிறேன்.

நமது பிரச்சினைகளுக்குத் தீர்வென்ன?

Problem-Solve-762x360

மனிதன் தனது கடமைகளைப் புறக்கணிக்கின்ற போது அல்லது தடுக்கப்பட்டவற்றில் பொடுபோக்காக இருகின்ற போது அனர்த்தங்களும் பிரச்சினைகளும் நிகழ்ந்து விடுகின்றன. பெரும்பாலும் அளவு மீறிய வேகத்தினால் அல்லது நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்துவதால் அல்லது நிர்ணயிக்கப்பட்ட பாதையை விட்டும் விலகுவதால் தான் வீதி விபத்துக்கள் நேர்கின்றன.

மனிதர்களை நோக்கி விடுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டல்களைப் பின்பற்றியொழுகினால் அதிகமான தீங்குகளை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பான். எனினும், “மனிதர்கள் தங்கள் கரங்களினால் சம்பாதித்துக் கொண்ட (தீய)வற்றினால் தரையிலும் கடலிலும் குழப்பம் தோன்றின.” (அர்ரூம்: 41)

நாம் வெறுக்கின்றவற்றையும் எம்மீது திணிக்கும் சில பலமான சக்திகள் இங்கு உள்ளன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. இந்த அனர்த்தங்களும் பிரச்சினைகளும் நமது விருப்பங்களுக்குள் புகுந்துவிடாமல் நாம் போராடுவோம்; அவற்றினுள் நாம் விழுந்துவிடவும் மாட்டோம். நாம் அவற்றை உறுதியோடும் நிதானத்தோடும் கையாள்வோம்; குழப்பமுற்றுக் கலவரமடைய மாட்டோம். ஏனெனில் அவை உலக வாழ்வில் நாம் கடக்க வேண்டிய சோதனைகள்தான்.

எனினும் நான் இங்கு குறிப்பிடப் போவது நான் அறிந்தமட்டில் பெரும்பாலும் மனிதர்கள் தங்களது கரங்களினால் உருவாக்கிக் கொண்ட சமகால உலகின் பெரும் பிரச்சினைகளைக் குறித்தாகும்.

அவை சரியான இறை நம்பிக்கையின்மையால், இறைவழிகாட்டலை வேண்டாமையினால், அழிவை விட்டும் பாதுகாக்கும் அடையாளங்களைத் தெரியாமையால் தோற்றம் பெறுகின்றன.

தமது வாழ்வாதாரங்களை மூர்க்கமாகத் தேடிக்கொண்டிருப்போரைத் தீவிரமான குழப்பம் பீடித்து சோதித்துக்கொண்டிருக்கின்றது. இத்தகையவர்கள் ஹலால்-ஹராம் விதிகளையும் கூட பாழாக்கிவிடுவார்கள். மட்டுமன்றி ஏனையோரை முந்திவிட வேண்டும் என்பதற்காக இயலாமையையும் பலவீனத்தையும் மிதித்துக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

உலகம் முழுதும் நிரம்பியிருக்கும் ஆடம்பரங்களை நாம் எதன் மூலம் விவரிக்கிறோம்? அல்லாஹ் பற்றிய அறிவீனம், படைப்புக்களை சார்ந்திருத்தல், இலாபத்துக்கெனவே அல்லாது வேறு விளக்கம் இல்லை.

நான் இங்கு மார்க்கத்தின் எதார்த்தமாக இருக்கும் ஒரு வாக்கியத்தை நினைவுபடுத்துகிறேன். அது மடத்தனமான விளக்கங்களோ திரிபுபடுத்தல்களோ அற்றதொரு வாக்கியம்.

ஒரு மனிதனுக்கு உன்னத குணங்களும் இனிய உணர்வுகளும் நாணயமும் மிக்க நண்பனொருவன் வாய்க்கப்பெற்றால் அந்நண்பனை இவ்வுலக வாழ்வெனும் பாலைவெளியில் நிழல் தரும் தோப்பாக ஆக்கிக்கொண்டுவிடுவான். ஒருமுஃமினைப் பொறுத்தமட்டில் தனது இரட்சகனுடனான தொடர்பு இதைவிட நெருக்கமானதாக இருக்காதா என்ன? அவனது இரட்சகன் அன்பாளனும் கண்ணியம் மிக்கவனுமாவான். “அல்லாஹ்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவனுக்கென திருநாமங்கள் உள்ளன.” (தாஹா: 8)

நாங்கள் அவனது விசாலமான அருளாலும் குறைவற்ற அருட்கொடைகளாலும் நிறைந்த பரக்கத்துக்களாலும் ஜீவிக்கிறோம். எனினும் அவை அனைத்தும் ஒரு நாட்டுப்புறக் கவிதையொன்றில் கூறப்பட்ட ஆரோக்கியத்தை ஒத்திருக்கின்றது:

“ஆரோக்கியம் என்பது
சுகதேகிகளது சிரசுகளில்
அணிவிக்கப்பட்டிருக்கும் கிரீடமாகும்.
நோயாளிகள் தவிர்த்து
யாரும் அதனைக்
காணமாட்டார்கள்.”

இறைவனது அருளை இரவு பகலாக நாம் அசட்டை செய்துகொண்டிருப்பது துரதிஷ்டவசமான விடயமாகும். பின்பு தடுக்கப்பட்ட சிலவற்றை இழந்துவிட்டு அதனைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருப்பதில் பல மடங்கு துணிகரமாக இருப்போம். அங்கே நாம் இழந்தவற்றை நமது வலியுறுத்தப்பட்ட நலன்கள் அல்லது தடுக்கப்பட்ட நலவுகள் என எண்ணிக்கொண்டிருப்பது விநோதமானது. இறை ஏற்பாட்டுடன் நமது நிலைப்பாடு மூஸா (அலை) அவர்கள் தனது அறிவுக்குப் புலப்படாததை ஃகிழ்ர் (அலை) செய்து காட்டிய போதான நிலைப்பாட்டை மீள ஞாபகப்படுத்துவதுதான்.

இக்கதையுடன் எனக்கு “பயனுள்ள தீங்கு” என்ற கூற்று ஞாபகம் வருகிறது. ஆம், சில விடயங்கள் இருக்கலாம். அதனை ஆரம்பத்தில் ஒதுக்கிப் புறக்கணித்து விட்டிருப்போம்; இறுதியில் அதனைப் புகழ்ந்திருப்போம். “(ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.” (அந்நிஸா: 19)

இங்கே ஈமானுக்கான சில அரிச்சுவடிகள் உள்ளன. அவற்றை நாம் அறிந்துகொண்டால் உலகைப் பீடித்திருக்கும் குழப்பம், பதற்றம்,  பிரச்சினைகள் நீங்கிவிடும். மனிதனது பொறாமை அல்லது மனித உணர்வுகள் தான் இப்பிரச்சினைகளுக்குப் பின்னணியில் இருக்கின்றன என நான் கருதுகிறேன்.

வரண்டு போயிருக்கும் அறிவியல் முன்னேற்றத்துடன் நாம் தான் இந்தப் பிரபஞ்சத்தை இயக்குபவர்களென்றும் இங்குள்ள எல்லாவற்றுக்கும் எம்மிடமே கடிவாளம் உண்டு எனவும் கற்பனை பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

மனிதனுக்கு மாத்திரம் எவ்வித உயர் வழிகாட்டலின் துணையும் இல்லாமல் அவனது இலக்கை அடைய முடியுமென நினைப்பது பெரும் மடத்தனமாகும்.

எமக்குள்ள நாட்ட சுதந்திரத்தின் மூலம் செயல்பட முடியுமான பரப்பு மிகவும் குறுகியது. அவ்வாறொரு பரப்பு உண்டு. எனினும் அது நமது பிறப்பு தொடங்கி இறப்பு வரைக்குமுள்ள சில கட்டங்களுக்கு தவிர வேறு நம்மால் நுழைய முடியாதளவு மட்டுப்பட்டது. கடல்களதும் சமுத்திரங்களதும் நீரை தானே உருவாக்குவதாக நினைத்துக்கொள்ளும் மீனொன்று எவ்வளவு மடத்தனம் மிக்கதாக இருக்கும்! அது உருவாக்குவது நீருக்குள்ளால் மூச்செடுப்பதற்கான செவுள்களாலான முறைமையை மட்டுமாக இருக்கலாம்.

நம்மில் ஆரம்பமானவரும் இறுதியானவரும் இடையிலிருப்போரும் அறிந்துகொள்ள வேண்டியது,
“எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.” (அல்முல்க்: 1) மேலும், “எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? – யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக – ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)” என்று கேட்பீராக.” (அல்முஃமினூன்: 88) மேலும், “அல்லாஹ்வுடன் வேறு எந்த நாயனையும் அழைக்காதீர்; அவனைத்தவிர வேறு நாயன் இல்லை, அவனைத் தவிர எல்லாப் பொருட்களும் அழிந்து விடுபவையேயாகும்; அவனுக்கே எல்லா அதிகாரமும் உரியது; இன்னும் அவனிடமே நீங்கள் (யாவரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.” (அல்கஸஸ்: 88)

இவற்றை அறியாதிருக்கும் மடத்தனம்தான் என்ன? எவ்வித பிரக்ஞையோ குறிக்கோளோ இன்றி இவ்வுலகத்திலே மூழ்கியதுதான் காரணம்.

அல்லாஹ்வையும் அவனது பண்புகளையும் விசுவாசிப்பதைத் தவிர்த்து பிரச்சினைகளுக்கு வேறு தீர்வு இல்லை. இஸ்லாம் மனிதர்களுக்கு அபூர்வமான, ஏற்றுக்கொள்ளத்தக்க திருப்திகரமான, அமைப்பில் அவனது இரட்சகனை அறிமுகப்படுத்துகிறது.

பின்பு நிகழ்ந்த அனர்த்தம் எது? தவறுவிட்ட இடம் எது? என அறிந்தவராக நோக்குவார். இவற்றையெல்லாம் செய்தது யார்? பின்பு கூறுவார்: “இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவர் எவருமில்லை. நீ தடுப்பதைத் கொடுப்பவரும் எவரும் இல்லை. எந்த செல்வருடைய செல்வமும் உனக்குப் பயனளிக்காது.

இந்த இறுதி வாக்கியத்துடன் சற்று நிறுத்துவோம். நல்லெண்ணமுடையவர்கள் இவ்வுலகில் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். அவ்வாறு அவர்கள் இருப்பது மட்டும் போதுமா? அவ்வாறிருப்பதால் மட்டுமே ஏனையோரிடத்தில் இவ்வுலகின் செல்வ வளங்களும் முன்னேற்றமும் சுபீட்சமும் ஏன் வழங்கப்பட்டுள்ளது என கேள்வி கேட்பாரா?

இந்த கண்டிப்பான குணம் மாத்திரம் எந்த வகையிலும் அதனை சார்ந்தோருக்கு எத்தகையதையும் தந்துவிட மாட்டாது என்பதனை இஸ்லாம் வலியோறுத்துகின்றது. அது ஒரு போதும் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எந்தப் பயனையும் தந்துவிடாது. இதுதான் சிலர் மறுமைநாள் குறித்து வினவுவதாகும். இதுதான் சிலருக்கு மொத்தமாகவும் இன்னும் சிலருக்கு முழுமையாகவும் உள்ள அனுபவத்தின் பகுதியாகும். அதில் எந்தத் கெட்டித்தனமும் இல்லை. சிலவேளை அது உலகில் அலங்காரமாகவும் மறுமையில் அவலமாகவும் இருக்கலாம். மறுமை நாள் குறித்த நம்பிக்கையின் விளைவுதான் இது.

உலகமே முறைப்பட்டுக்கொண்டிருக்கும் பிரச்சினைகளில் ஒன்றுதான் எல்லா இடங்களிலும் குடிகொண்டுவிட்டிருக்கும் வறுமைப் பிரச்சினை. இதற்குத் தீர்வுகளைக் கொடுக்க முன்னால் முதலில் இது பற்றிய விவரங்களை வரையறுத்துத் தர விரும்புகிறேன். நமது நாட்டின் நீதியமைச்சில் பணிபுரிந்து வந்த ஒரு வேலையாள் ஒரு பெரிய குடும்பத்திற்கே உணவு விடயங்களைக் கவனித்து வந்ததை நான் நன்கறிவேன். ஒரு முறை நான் அவரிடம் ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து அவர் உதவும் குடும்பத்துக்கு பயனளிக்குமென்றேன். எனினும் கண்ணியமிக்க ப்பணியாளர் அதனை மறுத்துவிட்டு சென்று தான் பசியோடிருந்து அவர்களுக்கு உதவினார்.

இந்த வகை ஏழைகளைப் பார்த்துத்தான் இம்மார்க்கம் கூறுகிறது: “இவர்கள் சுவனவாசிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.”

நமது தேச சுதந்திரப் போராட்டத் தியாகி முஹம்மத் பரீத், வெள்ளையருக்கு எதிராக ஆக்கிரமிப்பை விட்டும் விடுவிப்பதற்கான தனது சுதந்திரப் போராட்டப் பாதையில் தன்னிடத்தில் நிலத்தில் ஒரு துண்டு சொத்தினைக் கூடக் கொண்டிருக்கவில்லை. இவ்வாறுதான் நமது ஆரம்பப் பரம்பரையை சேர்ந்த முஹாஜிர்களும் அன்ஸார்களும் தாம் விசுவாசித்த கொள்கைக்காக வறுமைக்கு மத்தியிலும் தியாகம் மேற்கொண்டார்கள்.

இன்று நாம் அறிந்துள்ள பெரும் பெரும் தலைவர்களில் கொஞ்சம் சொத்துக்களை வைத்திருந்தவர்கள், அல்லது எதனையும் வைத்திருக்காதவர்களும் அவர்கள் ஆட்சியை பொறுப்பேற்றதும் செல்வம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. அவர்களும் அவர்களது உறவினர்களும் நண்பர்களும் ஏழேழு பரம்பரைக்குமான அனைத்து வித சுகபோகங்களையும் உண்டு அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இத்தகைய செல்வந்தர்களைத் தான் இம்மார்க்கம் நரகத்தின் கூட்டத்தவர்கள், தீய முடிவைக் கொண்டவர்கள் என அழைக்கின்றது.

இங்கு மனிதகுலத்திலே இன்னொரு வகையான ஏழ்மையும் மூன்றாம் உலக நாடுகளில் பின்னடைந்த நகரங்களில் பரவிப் போயிருக்கிறது. அதனால் அஅங்கு குற்றச்செயல்கள் பரவிப்போயிருக்கின்றன. இவ்வகையான விடயங்களை விட்டும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். மனிதனுக்கு நலவின் பக்கம் இலேசுபடுத்திக் கொடுக்க வேண்டும். உண்மையில் இவ்வாறான பட்டினியும், உடுத்த ஆடைகளின்றியும் இருக்கும் நிலையில் ஒரு மனிதன் அல்லது மக்கள் கூட்டம் ஏதும் செய்யாமல் விடுமாயின் அவர்கள் பாவிகளே.

பெயரளவில் மாத்திரம் இஸ்லாத்தைப் பின்பற்றுவோரை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் சிங்கம் விட்டுப் போட்டுச் செல்லும் மீதத்தை சாப்பிடும் நரிகள் போன்றவர்கள். அவர்கள் எந்த வித நுணுக்கத்தையும் பெற்றிருக்க மாட்டார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டிவிடவும் மாட்டார்கள்.

ஏதாவது உதவி கிடைத்து விட்டால் வயிறு நிரம்புவார்கள். எப்புறமிருந்து தாக்கப்பட்டாலும் சிதறிவிடுவார்கள். ஒரு பொக்கிஷத்தின் திறவுகோல் கொடுக்கப்பட்டாலும் அதனைத் நிர்வகிப்பதற்கு சக்தியற்றவர்கள். அவர்கள் முன்னால் அந்த கஜானாக்கள் எப்போதும் மூடப்பட்டே இருக்கும்.

உறுதியாக ஏழ்மைக்குத் தான் இத்தகையவர்கள் லாயக்கானவர்கள். தம்மை மாற்றிக் கொள்வதுதான் அவர்களுக்குத் தேவை. இவர்கள் பொருளாதார விடயத்தில் சுமைகளாக இருப்போராயின் அரசியல் விடயத்திலும் சுமையாகத்தான் இருப்பார்கள்.

பிலிப்பைன்ஸின் புரட்சி வீரர்களாக இருந்தவர்களது வாசகம் ஒன்று நினைவுக்கு வருகின்றது. “இங்கு அடிமைகள் இல்லாமல் இருந்தால், சர்வாதிகாரிகளுக்கு இடமிருக்காது.” எல்லாவற்றுக்கும் சாமரம் வீசும் அல்லக்கை ஆதரவாளர்களின்றி பிர்அவ்ன்கள் தோற்றம்பெற மாட்டார்கள்.

இத்தகைய ஏழைகள் எப்போதுமே நெருக்கடியின் போது தமது கரங்களை நீட்டிக் கொண்டே இருப்பார்கள். மனிதாபிமானத்தின் பெயரால் வசதி படைத்தவர்களும் தம்மிடம் மிஞ்சுவதில் கொஞ்சத்தை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். எது வரைக்கும் தான் தாழ்ந்திருக்கும் கரங்கள் தொடர்ந்தும் தாழ்ந்ததாகவும் உயர்ந்திருக்கும் கரங்கள் தொடர்ந்தும் உயர்ந்ததாகவும் இருப்பது?

வறுமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது ஒரு வேலைத் திட்டம். அது கேட்கும் போது கொடுக்க வேண்டிய உதவியல்ல. அதனை அல்லாஹ் கூறுவதுதான்: “(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் – எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்.” (அல்அஃராஃப்:10)

அழிவுகளின் பக்கம் செல்லாது மனதுகள் எவ்வளவு மாறவேண்டியிருக்கின்றது. உதவிகள் அளிப்பது பூரணத்துவத்தை அடைவதற்கான ஏணி தான். அலி (ரழி) அவர்கள் கூறும் ஆச்சரியமான கூற்றைப் பாருங்கள்: “மனிதர்கள் எல்லோரையும் கஷ்டம் சூழ்ந்துகொள்ளுமாக இருந்தால் ஈகைக்குணம் அற்றுப் போய் சண்டைகளே எங்கும் இருக்கும்.”

மூன்றாம் உலக மக்கள் நட்சத்திரக் கணிப்புக்களைப் பார்த்து விட்டு மகிழ்ச்சியும் சுபீட்சமும் வருமென நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அல்லது முஸ்தபா அமீன் எழுதியுள்ளவாறு ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டு டீ ஆர்டர் பண்ணுவது போல “மனித உரிமை” , “சுதந்திரம்” , “சமூக நீதி” என ஆர்டருக்கு சொல்வது போல் சும்மா சொல்லிக்கொ ண்டிருக்கிறார்கள்.

நாம் வறுமைப் பிரச்சினை குறித்துத் தொடர்ந்தும் எழுதிக் கொண்டதோடு விட்டிருக்கிறோம். நமது அன்றாட வாழ்வில் அதன் கொடுமைகளை அனுபவித்ததில்லை.

இவ்வுலகின் இன்னும் பல பிரச்சினைகளை நாம் அவதானித்துப் பார்த்தால் அதில் ஒன்று தான் சமாதானம். உலகம் அதன் இருப்பையும் நாகரிகத்தையும் இழந்து போயிருக்கும் விடயம் தான் சமாதானம் குறித்த விடயம்.

உலகிலே சமாதானம் பற்றிப் பேசுவோரது தர்க்கங்கள் விநோதமாக இருக்கும். அவர்கள் பலஸ்தீனிலே அரபுகளது இருப்புக்கு வேட்டு வைத்துவிட்டு இஸ்ரேலை உருவாக்கி மஸ்ஜிதுல் அக்ஸா இருக்குமிடத்தில் சுலைமான் கோயில் உருவாக்க வேண்டுமென திட்டமிட்டுக்கொண்டே சமாதானம் பற்றிப் பேசுவார்கள்.

ரஷ்யர்கள் இஸ்லாமிய ஆப்கானை ஆக்கிரமித்து அங்கு இஸ்லாத்தை கருவறுக்கத் திட்டமிட்டுக் கொண்டு சமாதான கீதம் பாடுவார்கள்.

தென்னாபிரிக்க வெள்ளையர்கள் அங்குள்ள கறுப்பர்களுக்கு மனித அந்தஸ்தைக் கூட வழங்காது சமாதானம், அமைதி குறித்துப் பேசுவார்கள். அமெரிக்கர்கள் அரபுக்களுக்கெதிரான யூத ஆக்கிரமிப்பை ஆதரித்துக் கொண்டே சமாதானம் வேண்டுமெனக் கூவுவார்கள்.

உலகமே ஒருவித நயவஞ்சகத்தனத்தாலும் வெற்றுப் பேச்சாலும் போர்த்திக் கொண்டு இருக்கையில் எவ்வாறு இதனோடு சமாதானம் கூடவே வர சாத்தியமில்லை.

நீதி முதலில் வேண்டும். அடுத்து தான் மற்றவை.

உலகமெல்லாம் காட்டுச் சட்டம் ஆளும் போது சமாதானமும் அமைதியும் வருவது சாத்தியமற்றது.

அல்குர்ஆன் நம்பிக்கையாளர்களை நோக்கி சமாதானத்தில் கரிசனை காட்டுமாறு அறைகூவல் விடுக்கின்றது. “நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அமைதிக்குள் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்” (அல்பகறா: 208)

இந்த அறைகூவலைப் புறக்கணித்தால் என்ன நிகழும்? பூமியெல்லாம் துயரம் நிறைந்து பாழடைந்துவிடும். “(போருக்கு வராது) நீங்கள் பின் வாங்குவீர்களாயின், நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடுவதிலிருந்தும்) துண்டித்து விடவும் முனைவீர்களோ? இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து, இவர்களைச் செவிடாக்கி இவர்கள் பார்வைகளையும் குருடாக்கி விட்டான்.”
(முஹம்மத்: 23)

போர்களின் போது ஆண்களும் பெண்களும் சிறார்களுமாக அனுபவிக்கும் கொடுமைகளை குறித்த வேதனை மிக்க கதைகளையும் கண்ணீரை வரவழைக்கும் புகைப்படங்களையும் பார்த்திருக்கிறோம். உண்மையில் யுத்தங்கள் வெறுக்கத்தக்கவை. யுத்தத்தை மூட்டிவிடுவோருக்கு நாசம் உண்டாகட்டும்.

இறை வேதம் எதிலும் தாக்குதல் யுத்தத்துக்கு அனுமதி கொடுக்கப்படவே இல்லை. மாறாக மக்களையும், உரிமைகளையும், வழிபாட்டிடங்களையும் தற்காக்கும் யுத்தத்துக்குத் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்: “மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்.” (அல்ஹஜ்: 40)

கஃபாவின் இரட்சகன் சமாதானம் வேண்டும் என்பதற்காக திருடர்களிடம் சரணடையச் சொல்லி ஏவவில்லை. இந்த நம்பிக்கைக் கோட்பாட்டை உடைய ஒரு மனிதன் அவ்வாறு இருந்துவிடவும் மாட்டான்.

தூய எண்ணமுடையவர்கள் ஒன்றிணையும் போது அமைதியைத் தோற்றுவித்துப் பேணும் உலகளாவிய அமைப்புக்கள் உருவாகும். உள்ளங்கள் வக்கிரங்களை விட்டும் தூய்மைப்படும் போதுதான் இது உருவாகும். முதலும் கடைசியுமாக இது அல்லாஹ்விடமிருந்தே துவங்கி அவனிலேயே முடிவடையும்.

ஷெய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி
தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப் (நளீமி)