முஹர்ரம்: புது வருடமும் ஹிஜ்ரத்தும்

img-20161003-wa0018

முஹர்ரம் என்றால் அதன் பொருள் சங்கையாக்கப்பட்டது என்பதாகும். அதன் பொருளே அதன் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது.மேலும் அது ஷஹ்ருல்லாஹ் (அல்லாஹ்வுடைய மாதம்) என்றும் அழைக்கப்படுவதாலும் அதன் தனித்தன்மையானது உயர்வானதாக பறை சாட்டப்படுகின்றது.

இஸ்லாமியப் புது வருடம் மற்றும் முஹர்ரம் குறித்துப் பேசும் போது கீழ்வரும் தலைப்புகளை உள்ளடக்குவது கட்டாயமானது:

1. இஸ்லாமியப் புது வருடத் தேர்வு.

2. ஹிஜ்ரத் நிகழ்வுகள்.

3. முஹர்ரம் முதல் பத்து.

4. கர்பலா நிகழ்வுகளு அகீதாவுக்கு வேட்டு வைக்கப்பார்க்கும் ஷீஆக்களும்.

5. ஆஷூரா நோன்பு மற்றும் தாஸூஆ நோன்புகள்.

 

ஹிஜ்ரி ஆண்டுக்கணக்கு ஆரம்பம்:

ஹிஜ்ரி ஆண்டுக்கணக்கு பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் உருவானது அல்ல. இன்னும் சொல்லப்போனால், இஸ்லாமியர்களுக்கு என்று தனியாக நாட்காட்டி அப்போது பின்பற்றப்படவில்லை. அவர்களுக்குப் பின் வந்த அபுபக்கர் (ரளி) அவர்கள் காலத்திலும் இது உருவாக்கப்படவில்லை. ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மறைந்து ஏறத்தாழ ஏழு வருடங்கள் கழித்து உமர் (ரளி) அவர்களது ஆட்சிக் காலத்தில் (கி.பி.639ம் ஆண்டு) வருடத்திற்கு அடையாளமாக எந்தப் பெயரைச் சூட்டலாம,; ஆண்டின் தொடக்கமாக எதைக் கருதலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது.

 

இப்படி ஒரு ஆலோசனை நடைபெறுவதற்கான சூழலை உருவாக்கிய பெருமை நபித்தோழர் அபுமூஸா அல்அஷ்அரீ (ரளி) அவர்களையே சாரும். ஏனெனில் அவர்கள் ஓரு முறை உமர் (ரளி) அவர்களுக்கு கடிதம் எழுதும் போது அரசின் கடிதங்களில் தேதியிடப்படாமை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்வியின் விளைவாக உடனடியாக முஸ்லிம்களுக்கென்று பிரத்தியேக நாட்காட்டி ஒன்றை உருவாக்க வேண்டியதின் அவசியத்தை உமர் (ரழி) அவர்கள் உணர்ந்தார்கள்.

 

எனவே இஸ்லாமிய ஆண்டின் துவக்கம் குறித்து நபித்தோழர்களுடன் ஆலோசிப்பதற்கான ஒரு கூட்டத்தை உமர் (ரளி) அவர்கள் கூட்டினார்கள். அதில் முக்கியமாக நான்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நான்கும் நபிகள் நாயகத்தின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அவை:

1) பெருமானாரின் பிறப்பு

2) பெருமானாரின் இறப்பு

3) பெருமானார் நபியாக தேர்வு செய்யப்பட்டது

4) பெருமானார்; (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) புலம் பெயர்ந்தது.

 

இவைகளில் ஏதாவது ஒன்றை இஸ்லாமிய நாட்காட்டியின் துவக்கமாக எடுத்துக்கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது. உமர்(ரழி) அவர்கள் ‘ஹிஜ்ரத்’தை இஸ்லாமிய ஆண்டு துவக்கமாக தேர்வு செய்தார்கள். மற்ற மூன்று நிகழ்வுகளும் இஸ்லாமிய வரலாற்றிலும், அண்ணலாரின் வாழ்விலும் முக்கியமானவை தான் என்றபோதிலும் அவை அனைத்தையும் விட ஹிஜ்ரத் மிக முக்கியமானது என்பதே உமர்(ரழி) அவர்களின் முடிவுக்கு காரணமாகும். ஆண்டுக்கு அடையாளமாய் சூட்டப்படுவதற்கு மிகவும் பொருத்தமான, அதே நேரத்தில் அழுத்தமான பொருளை தரக்கூடிய பெயரையே உமர்(ரழி) அவர்கள் தேர்வு செய்தார்கள்.

அந்த வகையில் கி.பி 622 ஜுலை 16 ம் தேதி ஹிஜ்ரி முதலாம் ஆண்டின் முதல் நாளாக கருதப்படுகிறது.

 

ஹிஜ்ரத் நிகழ்வுகள்:

-மக்கா இறுதிப் பகுதியில் தஃவாவுக்கு அதிக எதிர்ப்பு

-ஸஹாபாக்கள் பெயர்வு

-தூதர் இறை அனுமதிக்குக் காத்திருப்பு

-காபிர்கள் தாருந் நத்வாவில், ஷெய்த்தான் ஷெய்கு நஜ்தின் வேடம், கொலை செய்யும் முடிவை தூண்டல், ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவர்(அபூஜஹ்ல்)

-ஜிப்ரீல், தூதருக்கு வஹி – ஹிஜ்ரத்துக்கான அனுமதி

-அலி, நபி முஹம்மத் (ஸல்) அவர்ககளின் படுக்கையில்

-தூதர் மண்ணை எடுத்து யாஸீனின் ஆரம்ப பகுதிகளை ஓதல், காபிருக்கு உறக்கம் பீடித்தல்

-தூதர் அபூபக்ர் இல்லத்துக்கு, காபிர்கள் அலியை நம்பி ஏமாற்றம்

-அபூபக்ரின் எல்லையிலா மகிழ்வு, பயண ஏற்பாடு

-முஷ்ரிக்கான அப்துல்லாஹ் பின் உரைகத் ஆரம்ப பயண வழிகாட்டல், அஸ்மா பின்த் அபீபக்ர் உணவு விநியோகம்

-மூன்று நாள் தவ்ரில், புறா முட்டையும் சிலந்தி வலையும்

-காபிர்களது வருகை, செவ்வொட்டகங்கள் பரிசு, அபூபக்ரின் பாதத்தைப் பாம்பு தீண்டல், இன்னல்லாஹ மஅனா

-மாற்றுப் பாதையில் பயணம், ஆமிர் பின் புஹைரா எனும் கிறிஸ்தவர்

-சுராகா பின் மாலிக் குதிரை மண்ணுள் புதைதல் மற்றும் கிஸ்ராவின் கிரீடம் வாக்குறுதி

-உம்மு மஃபதின் கூடாரமும் நிகழ்ந்த அற்புதமும்

-பின் குபாவும், மதீனாவும்

-தலஅல் பத்ரு அலைனா

-அபூ அய்யூப் அல்அன்ஸாரி(ரழி) யின் வீட்டு முன்றிலில் ஒட்டகம் அமர்வு

 

முஹர்ரம் முதல் பத்து நாட்கள்:

லதாஇஃபுல் மஆரிஃப் நூலிலே அபூஉஸ்மான் நஹ்தி என்பவர் ஸலபுஸ் ஸாலிஹீன்கள் பற்றி இவ்வாறுகூறுகிறார்: ‘ஸலபுஸ் ஸாலிஹீன்கள் மூன்று பத்து இரவுப் பொழுதுகளைக் கண்ணியப்படுத்தினார்கள். ரமழானின் இறுதிப் பத்து, துல்ஹிஜ்ஜாவின் முதல்பத்து, முஹர்ரம் மாத்த்தின் முதல் பத்துநாட்களே அவையாகும்.’ எம் முன் சென்ற நல்லடியார்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களும் இப்பத்துநாட்களையும் கண்ணியமாகப் பயன்படுத்தி அல்லாஹ்வை நெருங்கக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். இமாம் அவ்ஸாஈ அவர்களும் மேற்குறித்த பத்து தினங்களிலும் நல்லமல்களில் அதிகமதிகம் ஈடுபடுவார்கள்.

 

தாஸூஆ, ஆஷுரா நோன்புகள்:

இந்த மாதத்தில் 10 ம் நாள் நோன்பு நோற்பது ஸுன்னத்தானதாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை  அதற்கு முந்தைய  ஓராண்டின் பாவத்திற்குப்  பரிகாரமாக அல்லாஹ்  ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன். (முஸ்லிம்)

முஹர்ரம் 10ம் நாள் நோன்பு நோற்பதை யஹுதிகளும் வழமையாக கொண்டிருந்தனர். யஹூதிகளுக்கு மாற்றமாகவும் , வித்தியாசமாகவும் அமைய வேண்டும் என்பதற்காக 09 ம் நாளன்றும் சேர்த்து நோன்பு நோற்பது ஸுன்னத்தாக்கப்பட்டது. அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாம் நாளையும் நோற்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)